NTT TAMIL

Current Date and Time
Loading...

இன்று (29.4.2025, செவ்வாய்கிழமை) காலை 10.30மணி அளவில் திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக அலுவலகத்தில், திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் மு.பரஞ்ஜோதி.MA.BL அவர்கள் தலைமையில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் மாவட்ட பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் அனைத்துலக எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர், முன்னாள் அமைச்சர் M.C.தாமோதரன், கழக அண்ணா தொழிற்சங்க பேரவை தலைவர் தாடி ம.ராசு, கழக அமைப்புச் செயலாளர் ஆர்.மனோகரன், கழக எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் பூனாட்சி, கழக அம்மா பேரவை இணை செயலாளர் செல்வராசு, கழக மகளிரணி துணை செயலாளர் பரமேஸ்வரி முருகன், கழகசிறுபான்மையினர் நலப் பிரிவு துணை செயலாளர் புல்லட் ஜான், மாவட்ட கழக அவைத் தலைவர் சமயபுரம் ராமு, மாவட்ட கழக இணை செயலாளர் இந்திராகாந்தி, மாவட்ட கழக துணை செயலாளர் கோவிந்தராஜ், மாவட்ட கழக பொருளாளர் சேவியர் மற்றும் மாவட்ட சார்பு அணி செயலாளர்கள், நகர, ஒன்றிய, பேரூராட்சி மற்றும் பகுதி கழக செயலாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

Related Posts

POST MY ADD