
திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அஇஅதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் (02.09.2025 செவ்வாய்க்கிழமை) காலை 10 மணியளவில் மாவட்ட கழக அலுவலகத்தில் திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் மு.பரஞ்ஜோதி.MA.BL அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது.

நிகழ்ச்சியில் கழக அமைப்பு செயலாளர்கள் முன்னாள் அமைச்சர் வளர்மதி, முன்னாள் கொரடா மனோகரன், மாநில அம்மா பேரவை இணை செயலாளர்கள் செல்வராசு.Ex.MLA, ஜெயம் ஸ்ரீதர், கழக மகளிரணி துணை செயலாளர் பரமேஸ்வரி, கழக சிறுபான்மையினர் நலப்பிரிவு துணை செயலாளர் புல்லட் ஜான், முன்னாள் மாவட்ட கழக செயலாளர் சுப்பு, மாவட்ட கழக அவைத் தலைவர் ராமு, மாவட்ட கழக இணை செயலாளர் இந்திராகாந்தி, மாவட்ட கழக துணை செயலாளர் கோவிந்தராஜ், மாவட்ட கழக பொருளாளர் சேவியர் மற்றும் ஒன்றிய, நகர, பகுதி, பேரூராட்சி கழக செயலாளர்கள், மாவட்ட சார்பு அணி செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

பொருள்:
30.8.2025 அன்று தலைமை கழகத்தில் நடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், மாண்புமிகு கழக பொதுச்செயலாளர் அவர்கள் வழங்கிய ஆலோசனை படி,
✌️ அமைக்கப்பட்டுள்ள பூத் கழக நிர்வாகிகள் செயல்பாடுகள்
✌️ வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணிகள்
✌️ இளைஞர் இளம்பெண்கள் பாசறை, இளம்தலைமுறை விளையாட்டு வீரர்கள் அணி, மாணவரணி
ஆகிய அமைப்புகளை மேலும் வலிமையாக்குதல்
✌️ தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகளின் செயல்பாடுகளை அனைத்து சமூக வலைதளங்களுக்கும் விரிவுபடுத்துதல்,
✌️ கழக அரசின் சாதனைகளையும், விடியா திமுக அரசின் மக்கள் விரோத ஆட்சியை பற்றி விளக்கி தெருமுனை பிரச்சாரக்கூட்டங்கள் நடத்துவது,
✌️ கழக வளர்ச்சி பணிகள்,
ஆகியவை குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
