
திருச்சி, ஜூன்.26-
திருச்சி மாவட்ட ஆட்சியராக பணியாற்றிய மா.பிரதீப்குமார் பேரூராட்சிகள் இயக்குனராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக திருச்சி மாநகராட்சி ஆணையராக பணியாற்றிய வே.சரவணன் திருச்சி மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து அவர் நேற்று திருச்சி மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றுக் கொண்டார். புதிய ஆட்சியர் வே.சரவணனுக்கு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் தங்களது வாழ்த்து தெரிவித்தனர். ஆட்சியராக பொறுப்பேற்றுக் கொண்ட அவர், பொது மக்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல் மற்றும் குறைகளை தீர்க்க பாடுபடுவேன் என்றும்,
குறிப்பாக பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளைஅதிகாரிகளிடம் பொதுமக்கள் எந்தவித தயக்கம் இன்றி தெரிவிக்க வேண்டும்.உங்களுக்கு சேவை செய்ய தான் நாங்கள் இருக்கிறோம். என்னை எளிதாக தொடர்பு கொண்டு பொதுமக்கள் குறைகளை தெரிவிக்கலாம். இவ்வாறுஆட்சியர் வே.சரவணன் தெரிவித்தார். இவர் இதற்கு முன்பு திருச்சி மாநகராட்சி ஆணையர், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் இணை மேலாண்மை இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.