New Trichy Times

Current Date and Time
Loading...

சென்னை இராமலிங்கர் பணி மன்றமும் சாவித்ரி அம்மாள் ஓரியண்டல் மேல்நிலைப் பள்ளியும் இணைந்து நடத்திய கலை இலக்கிய போட்டிகள்.

பொள்ளாச்சி நா. மகாலிங்கம் நினைவாக பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு மாநில அளவிலான கலை இலக்கியப் போட்டிகள் கடந்த 59 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு சென்னை மண்டல அளவிலான கலை இலக்கியப் போட்டிகள் மயிலாப்பூர் சாவித்ரி அம்மாள் ஓரியண்டல் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் 16-8-25 சனிக்கிழமையான இன்று சிறப்பாக நடைபெற்றது. அதில் சென்னை சுற்றியுள்ள பல்வேறு கல்வி நிறுவனங்களைச் சார்ந்த நூற்றுக்கு மேற்பட்ட மாணவ மாணவியர் பங்கேற்றனர். நிகழ்வின் தொடக்க விழாவில் பள்ளியின் தலைமை ஆசிரியர் சு. வித்யா, வழக்கறிஞர் பால சீனிவாசன், ராமலிங்கர் பட்டிமன்ற ஒருங்கிணைப்பாளர் பாலசுப்ரமணியன் பங்கேற்று நிகழ்ச்சியின் நோக்கம் குறித்து மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் விளக்கினர்.

மாலை போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பள்ளி மாணவர்களுக்கு பேச்சு, இசை, மனனம் ஆகிய மூன்று பிரிவுகளில் போட்டியில் நடத்தப்பட்டன.
கல்லூரி மாணவர்களுக்கு கவிதை, கட்டுரை, பேச்சு ஆகிய மூன்று பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன.
போட்டிகளில் நடுவராக பேச்சாளர்கள் ஆதிரா முல்லை, கலைச்செல்வி புலியூர்கேசிகன், கோவிந்தராஜூலு, விஜயலட்சுமி, பாடகர் வைஜெயந்தி, நாடக நடிகர் துரை, புலவர் சீனி சோமசுந்தரம், தமிழ் ஆசிரியர் ரா. ஹரிஹரன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

ஒவ்வொரு பிரிவிலும் முதல் பரிசு பெற்ற மாணவர்களுக்கு ரூ.5000 பரிசு தொகையும், இரண்டாம் பரிசு பெற்ற மாணவர்களுக்கு ரூ.3000 பரிசு தொகையும், மூன்றாம் பரிசு பெற்ற மாணவர்களுக்கு ரூ.2000 பரிசுத்தொகையும் சான்றிதழ்களுடன் வழங்கப்பட்டன. மொத்த பரிசுத்தொகையாக ரூ அறுபதாயிரம் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு உற்சாகப்படுத்தப்பட்டது. நிகழ்வில் இறுதியாக பள்ளியின் பொறுப்பாசிரியர் கி. ஹரிஹரன் அவர்கள் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

2 Comments

  • Your blog is a true hidden gem on the internet. Your thoughtful analysis and in-depth commentary set you apart from the crowd. Keep up the excellent work!

  • Your writing is a true testament to your expertise and dedication to your craft. I’m continually impressed by the depth of your knowledge and the clarity of your explanations. Keep up the phenomenal work!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

POST MY ADD