NTT TAMIL

Current Date and Time
Loading...

மாணவியின் எதிர்காலத்திற்கு ரூ.20 லட்சம் நன்கொடை மற்றும் வாழ்நாள் கல்வி செலவையும் ஏற்று கொண்ட பில்ரோத் மருத்துவமனை,

சிதம்பரம் அருகே உள்ள ஒரு சிறிய கிராமம் ஆன நத்தமலை சேர்ந்த ஜெயப்ரவதனி என்ற மாணவிக்கு துல்லியமான நேரத்தில் இதய மாற்று அறுவை சிகிச்சை செய்து சாதனை படைத்த சென்னை பிரபல மருத்துவமனையான பில்ரோத் மற்றும் அதன் மருத்துவர்களும்

மாணவி ஜெயப்பர்வதனிக்கு 5வகுப்பு படிக்கும் போதே தன் உடலில் ஏற்பட்ட மாற்றங்கள்

தன்னால் இயல்பான வாழ்க்கையை மற்ற மாணவிகள் போல் வாழ முடியாமல் தினம் தினம் வேதனையில் தவித்த மாணவிக்கு கடவுளே மறு ஜென்மம் கொடுத்த மாதிரி வந்த மருத்துவர்கள் இது குறித்து மாணவி பேசுகையில் செப்டம்பர் 9ம் தேதி என்னால் மறக்க முடியாத நாள் அன்று தான் எனக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்ற நாள் என்றும் பூரித்து போன ஜெயப்பிரவதனி

இந்த சிகிச்சையில் மாணவியின் மன வலிமையும் பெரும் பாராட்டுதலுக்குரிய ஒன்றாகும்

இது குறித்து மாணவியின் பெற்றோர் பேசுகையில் மருத்துவர்களின் மிக துல்லியமான நேரத்தில் கடமை தவறாமல் பணியாற்றியதும் தான் இந்த அறுவை சிகிச்சைக்கு கிடைத்த வெற்றி என்று கூறினார்கள்

மாணவியின் பள்ளி ஆசிரியர்கள் பேசும் போது இதய மாற்று அறுவை சிகிச்சை என்பது அறிவியல் உலகின் அன்றாட நிகழ்வாக உள்ளது இதற்கு எங்கள் மாணவியே ஒரு உதரணம் மற்றும் இது அறிவியல் வெற்றி என்றும் கூறினார்கள்

இறுதியாக மாணவி பேசுகையில் வீணாக மண்ணில் புதைந்து போகும் உடல் உறுப்புகளை என்னை போன்றவர்களுக்கு தானம் செய்து உயிர் கொடுப்பதால் கிடைக்கும் உதவி வாழ்க்கையின் பெரிய பொக்கிஷம் என்றும் எல்லாரும் உடல் உறுப்புகளை தானம் செய்து என்னை போல் பலரை வாழ வைக்க வேண்டும் என்றும் கூறினார் தன் உறவினர்களுடன் சேர்ந்து மாணவியும் உறுதி மொழி எடுத்து கொண்டார்

பின் பில்ரோத் மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் டாக்டர் திரு.ராஜேஷ் ஜெகநாதன் அவர்கள் மாணவி ஜெயப்பிரதவனியின் மன வலிமையும்,மன உறுதியும் மானதார பாரட்டுவதாகவும், மேலும் மாணவியின் வருங்கால தேவைகளுக்கான உதவியாக ரூபாய்.20 லட்சத்திற்கான காசோலையை மாணவிக்கு வழங்கினார் மேலும் மாணவியின் வாழ்நாள் கல்வி செலவையும் நானும் எங்கள் மறுத்துவமனையும் ஏற்று கொள்ளும் என்றும் பத்திரிக்கையாளர்கள் மற்றும் மருத்துவர்கள் முன்னிலையில் உறுதி அளித்தார்.பின் உடல் உறுப்பு தானத்தில் தமிழ்நாடும்,இந்தியாவும் சிறந்து விளங்குவாதகவும், தமிழ்நாட்டில் வாரத்தில் 5 உடல் உறுப்பு தான அறுவை சிகிச்சை நடைபெற்று வருகிறது என்றும் கூறினார் மேலும் தமிழ்நாடு அரசு இணையதளத்தில் பதிவு செய்த உடனே மறுத்துவமனைகளுடன் இணைந்து அரசும் விரைவாக செயல்படுகிறது என்றும் பாராட்டினர் அனைவரும் உடல் உறுப்பு தானத்திற்க்கான விழிப்புணர்வு அளிக்க வேண்டும்,மேலும் ஒரு உயிரின் முக்கியத்துவத்திற்கு பில்ரோத் மருத்துவமனை நேரம்,கால சூழ்நிலைகள் கருதாமல் உழைக்கும் என்று கூறினார்

Related Posts

POST MY ADD