
பெட்ஷீட்டை போட்டு உட்கார்ந்து மனு வாங்கிய ஸ்டாலின் என்று பெருமை பேசும் நீங்கள், பச்சிளம் குழந்தைகளை மட்டும் தரையில் போடலாமா? தமிழக முதல்வர் அவர்களே? தமிழக சுகாதாரத்துறை இருண்ட காலத்திற்கு போய்விட்டதா? பச்சிளம் குழந்தைகளை கூட பாதுகாக்க வழி அற்றதாக திராவிட மாடல் அரசு இயங்குவதை நினைத்து வெட்கப்பட வேண்டும்.
கள்ளக்குறிச்சி அரசு மகப்பேறு மருத்துவமனையில், தொட்டில் இல்லாததால் பச்சிளம் குழந்தைகளைத் தரையில் படுக்க வைத்திருக்கும் அவலத்தை சுட்டிக் காட்டும் காணொளி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. சில நாட்களுக்கு முன்பு வடசென்னைசென்னை ஆர் எஸ் ஆர் எம் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல மருத்துவமனையிலும் மருத்துவ விதிகளை மீறி நடந்த கட்டிட மேம்பாட்டுப் பணியில் குழந்தைகள் பாதிக்கப்பட்டனர்.
தற்பொழுது கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் குழந்தைகளைப் படுக்கவைக்கக்கூட வசதியில்லாத தமிழக அரசின் கையாலாகாதனத்தின் மூலம் திராவிட விளம்பரம் மாடல் அரசின் மருத்துவ கட்டமைப்பு தோல்வி அடைந்துள்ளது என்பது தெளிவாக தெரிகிறது.தமிழக முதல்வர் ஸ்டாலின் இது குறித்து முழு விசாரணைக்கு உத்தரப்பட வேண்டும். தமிழகம் முழுதும் உள்ள அரசு தாய் சேய் நல மகப்பேறு மருத்துவமனைகளில் முழு ஆய்வு மேற்கொண்டு, குழந்தை பெற்ற தாய்களுக்கும், பச்சிளம் குழந்தைகளுக்கும் முழு மருத்துவ பாதுகாப்பை அளிப்பதை உறுதி செய்ய வேண்டும்.
தமிழகத்தின் பல மாவட்டங்களில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் முதல் மாவட்ட மருத்துவமனைகள் மட்டுமல்ல சென்னை அரசு ராஜீவ் காந்தி பொது மருத்துவமனை வரை அடிப்படை வசதிகள் இன்றி, முறையான சிகிச்சை அளிக்கப்படாமல் நோயாளிகள் படும் வேதனைகள் உடனடியாக தீர்க்கப்படும் வகையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் தமிழக சுகாதாரத் துறையில் ஆய்வுகளை நடத்தி முழுமையான நிர்வாக சீர்திருத்தத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.
உங்களுடன் ஸ்டாலின், ஓரணியில் தமிழகம் என தேர்தல் அரசியலுக்காக, மக்களுக்கு செய்த துரோகங்களுக்கு பரிகாரம் தேடும்
வகையில் ஓட்டு பிச்சைக்காக தெருத்தெருவாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் செல்வதால் மருத்துவத்துறை சீரழிந்து விட்டது. எனவே முதல்வர் ஸ்டாலின் தமிழக மக்களிடம், குழந்தைகளைப் பெற்ற தாய்மார்களிடம் “சாரிமா” என்று சொல்லி தப்பித்துக் கொள்ளலாம் என்று மக்கள் நலத்தை பற்றி கவலை கொள்ளாமல் காலம் தாழ்த்துவது ஆபத்தானது.
திமுக அரசு பதவி ஏற்றது முதல் தமிழக அரசு மருத்துவமனைகளில் நடக்கும் நிர்வாக சீர்கேடுகள் அவலங்கள் நோயாளிகளின் பிரச்சனைகள் குறித்து ஒவ்வொரு நாளும் ஊடகங்களில் வெளிப்படுத்தியும்
எந்தவித நடவடிக்கையும் இதுவரையும் மருத்துவத்துறையில் எடுக்கப்படவில்லை. ஆனால் இன்றும் மருத்துவமனையில் நடக்கும் அவலங்களை பற்றி சிறிதும் கவலைப்படாமல் வழக்கமாக முதல்வர் ஸ்டாலின் அரசு திராவிட மாடல் விளம்பர அரசு என்பதை உறுதிப்படுத்தும் வகையில், மருத்துவமனையில் நடக்கும் அவலங்களை நோயாளிகள் படும் துன்பங்களை மறந்தும் மறைத்தும் சுகாதார துறை அமைச்சர் மா.சுப்ரமணியம் திமுக அரசின் பெருமைகளாக பொய்களை பேசி வருவது கண்டனத்துக்குரியது.
முதல்வர் ஸ்டாலின் உடனடியாக மருத்துவ சுகாதாரத்துறையில் போர்க்கால அடிப்படையில் மாற்றங்களை ஏற்படுத்த முன் வரவேண்டும்.
ஏ.என்.எஸ்.பிரசாத்
தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர்
கைபேசி: 9840170721