New Trichy Times

Current Date and Time
Loading...

திருச்சிராப்பள்ளி, மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் முளை சாவு அடைந்த ஒருவரின் உடலில் இருந்து கல்லீரல், இதயம், கண்கள், இரண்டு சிறுநீரகங்கள் மற்றும் தோல் தானமாக இன்று (03.09.2025) பெறப்பட்டது. இதுபோன்ற நிகழ்வு 24-வது முறையாக நடக்கிறது.

கரூர் மாவட்டம், கொமட்டேரியைச் சேர்ந்த 27 வயது மதிக்கத்தக்க ஆண், சாலை விபத்தில் தலையில் பலத்த காயமடைந்து திருச்சிராப்பள்ளி, மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் 02.09.2025 அன்று அதிகாலை 12.30 மணி அளவில் அனுமதிக்கப்பட்டார்.

பல்வேறு மருத்துவ நிபுணர்கள் அடங்கிய குழு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படாமல் 03.09.2025 அன்று காலை 10.56 மணிக்கு அவர் மூளைச்சாவு அடைந்தார். இந்த மூளைச்சாவு மருத்துவர்களால் உறுதி செய்யப்பட்டு, அவரது உறவினர்களிடம் தெரிவிக்கப்பட்டது. இதனை உணர்ந்த இறந்தவரின் உறவினர்கள் முழுமனதுடன் அவருடைய உடல் உறுப்புகளை தானம் அளிக்க முன் வந்தார்கள். மேலும் தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையத்தின் வழிகாட்டுதலின் படி அவருடைய உறுப்புகளான கல்லீரல், இதயம், கண்கள், இரண்டு சிறுநீரகங்கள் மற்றும் தோல் தானமாக பெறப்பட்டது.

Transtan வழிகாட்டுதலின்படி, உடல் உறுப்பு வேண்டி பதிவு செய்தவர்களின் வரிசையின்படி, மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் நான்கு வருடங்களாக தொடாச்சியாக இரத்த சுத்திகரிப்பு சிகிச்சை பெற்று வந்த 32 வயது மதிக்கத்தக்க நோயாளிக்கு 03.09.2025 அன்று இம்மருத்துவமனை முதல்வர் …, MS,Ortho, D.Ortho., DNB Ortho, Ph.D., ACME தலைமையில் நிபுணத்துவம் வாய்ந்த மருத்துவக்குழு மூலம் இந்த அறுவை சிகிச்சை, சிறுநீரக அறுவை சிகிச்சை மருதுதுவக் குழுவினர், சிறுநீரக பிரிவு துறைத் தலைவர் மரு.நூர்முகமது. MD., DM., மற்றும் குழுவினர், மயக்கவியல் மருத்துவர் மரு.சந்திரன், MD, மற்றும் குழுவினர் மற்றும் செவியலியா மற்றும் உதவியாளர் குழு ஆகியோர் மூலம் முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் முற்றிலும் இலவசமாக, மாற்று சிறுநீரகம் வெற்றிகரமாக பொருத்தப்பட்டு நோயாளி நலமுடன் உள்ளார். இந்த சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையானது நமது மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் 44-வது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை ஆகும்.

மற்றொரு சிறுநீரகம் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஒருவருக்கும். கல்லீரல் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஒருவருக்கும். தோல் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஒருவருக்கும். இதயம் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஒருவருக்கும் தானமாக வழங்கப்பட்டது. இரு கண்விழிகளும் இம்மருத்துவமனையில் பயனாளிகளுக்கு தானமாக வழங்க பெறப்பட்டது. உடல் உறுப்பு தானம் செய்த கொடையாளிக்கு இம்மருத்துவமனை முதல்வர் அவர்கள் தலைமையில் அரசு மரியாதை செய்யப்பட்டு வழியனுப்பப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

POST MY ADD