NTT TAMIL

Current Date and Time
Loading...

திருச்சி மாவட்டம் லால்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை அரசு ஆரம்ப சுகாதார நிலைய கிராம சுகாதார செவிலியர் சுகாதார மேற்பார்வையாளர்களுக்கு குழந்தை உரிமை பாதுகாப்பு மற்றும் குழந்தை நலன் சார்ந்த சட்டங்கள் குறித்து திறன் வளர்ப்பு பயிற்சி 23.05.25 நடைபெற்றது. குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறை மாவட்ட குழந்தை நலக்குழு உறுப்பினர் முனைவர் பிரபு குழந்தைகள் என்போர் தாயின் கருவறை முதல் பதினெட்டு வயது பூர்த்தியடையும் வரை உள்ளவர்கள் குழந்தைகளுக்கான நான்கு வகையான உரிமைகள் மற்றும் குழந்தை திருமண தடுப்புச் சட்டம் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் மற்றும் குழந்தைகளுக்கான இலவச கட்டணமில்லா தொலைபேசி எண் 10 9 8 குறித்தும் மாவட்ட குழந்தை நலக் குழு மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு இளைஞர் நீதி குழுமம் மற்றும் குழந்தைகள் உதவி மையம் செயல்பாடுகள் குறித்து பயிற்சி அளித்தார். பயிற்சியில் மண்ணச்சநல்லூர் புள்ளம்பாடி லால்குடி ஆகிய வட்டாரங்களை சேர்ந்த சுகாதாரத்துறை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Related Posts

POST MY ADD