மாணவர்களின் கற்றல் அனுபவத்தை மேம்படுத்தும் நோக்கில் இலவச ஸ்மார்ட் கிளாஸ் தொலைக்காட்சி பெட்டியினை வழங்கிய திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ரெக்ஸ்
திருச்சி மாநகராட்சி 23வது வார்டில் உள்ள அங்கன்வாடி மையத்தில் உள்ள மழலையர் பள்ளி மாணவ மாணவிகளுக்கு கல்வி மற்றும் அறிவியல் நிகழ்ச்சிகள் மூலம் அதிகளவில் பயன் பெறும் வகையில், மாணவர்களின் கற்றல் அனுபவத்தை மேம்படுத்தும் நோக்கில் இலவச ஸ்மார்ட் கிளாஸ் தொலைக்காட்சி பெட்டியினை மாநகர மாவட்ட தலைவர், கவுன்சிலர் எல். ரெக்ஸ் மற்றும் இளைஞர் காங்கிரஸ் தேசிய பொதுச்செயலாளர் விச்சு லெனின் பிரசாத் ஆகியோர் வழங்கினர். இந்நிகழ்வு தமிழ்நாடு இளைஞர்
7.80 லட்சம் ஊழலில் திளைக்கும் ஊழல் அதிகாரிகள்!
அரசியல்வாதிகளை மிஞ்சும் அதிகாரிகள் பல்பு ஊழல்?ஊழலிலும் ஊழல் செய்துள்ளனர் -ஊழல் பெருச்சாளிகள்?அந்தநல்லூர் பஞ்சாயத்து யூனியனில் ரூ7,80,000 ஊழலா? திருச்சி மாவட்டத்தில் உள்ள அந்தநல்லூர் பஞ்சாயத்து யூனியனில் உள்ள 25 ஊராட்சிகளில் 12 ஊராட்சிகளில் 24W எல்இடி தெருவிளக்குகள், ஓசூரில் உள்ள Tanvi Infra நிறுவனத்திடம் இருந்து ஒரு 24W எல்இடி பல்பின் விலை 1950ரூபாய் வீதம் வாங்கி உள்ளனர். இவ்வளவு தூரம் சென்று வாங்க வேண்டிய நோக்கம் என்ன இது
புல்வாமா தாக்குதலில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள் குடும்பத்திற்கு 1 லட்சம் காசோலையை காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை வழங்கினார்
திருச்சி: செப் 11: அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி சார்பாக புல்வாமா தாக்குதலில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள் சிவசந்திரன், (CRPF) சுப்பிரமணியன் (CRPF) ஆகியோரின் படத்திற்கு மலர் தூவி மரியாதை மரியாதை செலுத்தி, அவர்களது குடும்பத்தினருக்கு தலா ஒரு லட்சத்திற்கான காசோலையினை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை MLA வழங்கினார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் மாநில தலைவர் திருநாவுக்கரசர் Ex. MP முன்னிலையில், திருச்சி மாநகர் மாவட்ட தலைவர், கவுன்சிலர் ரெக்ஸ், தெற்கு
தூய்மை பணியாளர்களுக்கு “தூய்மை சேவைக்கான விருந்தோம்பல்”
இன்று ஸ்ரீரங்கம் 7வார்டில் தூய்மை பணியாளர்களுக்கு “தூய்மை சேவைக்கான விருந்தோம்பல்” என்னும் நிகழ்ச்சியை திருச்சி சக்சஸ் ரோட்டரி சங்கம் திருச்சி மாநகராட்சி ஸ்ரீரங்கம் 7 வது வார்டு மாமன்ற உறுப்பினர் ராதா அவர்களுடன் இனைந்து ஒருங்கிணைத்தது. அரசின் பல்வேறு நலத்திட்டங்களை பற்றி விளக்கிக் கூறியும் அவர்களுக்கான சேமிப்பு முறை பற்றியும் விளக்கப்பட்டது மற்றும் அனைவருக்கும் அறுசுவை விருந்து அளிக்கப்பட்டது .இந்நிகழ்ச்சியை ஸ்ரீரங்கம் பகுதி திமுக செயலாளர் ராம்குமார் துவக்கி வைத்தார்
புதுரக க்ரைம் த்ரில்லர் திரைப்படம் ‘பெண்கோடு’ பெண்கோடு படத்தின் டைட்டில் ஃபர்ஸ்ட் லுக்கை ஜித்தன் ரமேஷ் வெளியிட்டார் மலையாளத்தில் இப்போது புதிய போக்கில் மிகவும் யதார்த்தமான திரைப்படங்கள் உருவாகி வருகின்றன. இவை பெரிய நட்சத்திரங்களின் ஆதரவு இல்லாமலேயே கதையின் அடர்த்தியை நம்பி உருவாக்கப்பட்டு ஒரு வணிக பரப்பை எட்டி உள்ளன.அந்த வகையிலான வரிசையில் உருவாகியுள்ள படம் தான் ‘பெண்கோடு’. ஆணும் பெண்ணும் ஒன்றல்ல. இரண்டும் வெவ்வேறானவை;இரண்டும் தனித்தனியானவை. என்கிறார் தத்துவ
உத்தியோக் உட்சவ் – அரசு பள்ளிக்கல்வி மாணவிகளுக்கான நாட்டின் முதல் முயற்சியாக அவதார் நிறுவனத்தினால் நடத்தப்பெற்ற தொழிற் பாதைகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி
உத்தியோக் உட்சவ் – “அரசு பள்ளிக்கல்வி மாணவிகளுக்கான நாட்டின் முதல் முயற்சியாக அவதார் நிறுவனத்தினால் நடத்தப்பெற்ற தொழிற் பாதைகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி இந்தியாவின் முன்னணி பணியிட கலாச்சாரத் தீர்வு நிறுவனமான அவதார், சமத்துவமான பணியிடங்களை உருவாக்குவதிலும், தனிநபர்கள் பொருளாதார சுதந்திரம் அடைவதுடன் அவரது வாழ்க்கை தரம் சிறப்பதிலும் முன்னணியில் செயல்பட்டு வருகிறது. அவதார் ஹ்யூமன் கேபிடல் டிரஸ்ட் (AHCT), அவ்தார் குழுமத்தின் லாபநோக்கற்ற பிரிவு ஆகும். இது, பின்தங்கிய சமூகத்தினருக்கு
திருமகள் மண் விஜய்க்கு ஜெயத்தை வழங்குமா?
திருச்சி மாவட்டத்தின் ஸ்ரீரங்கம் சட்டமன்றத்தொகுதி எப்போதுமே தனித்துவம் மிக்கது. ஆன்மீக பூமியின் ஸ்ரீரங்கம் ஆழ்வார்கள் பாடல்களில் 108 வைணவத்தளங்களில் முதன்மையானதாக போற்றப்படுவதோடு இந்து தர்மத்தின் ஆதர்ஷ சக்தியாக போற்றப்படுகிறது. திராவிடத்தலைவர்களும் சரி தேசியத்தலைவர்களும் சரி தேர்தல் பரப்புயை துவங்குவது ஸ்ரீரங்கத்தில் தான். ஆன்மீகத்திலும் அரசியலிலும் ஸ்ரீரங்கம் வெற்றித்தளமாக அறியப்படுகின்றது. தமிழ்நாடு முன்னாள் முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதா ஸ்ரீரங்கத்தில் போட்டியிட்டு முதல்வரானது குறிப்பிடத்தக்கது. அவரைத்தொடர்ந்து தவெக தலைவர் விஜய், தனது முதல்
வ.உ.சி பிறந்தநாள் அஇஅதிமுக மாநில அம்மா பேரவை இணை செயலாளர் அரவிந்தன் மாலை அணிவித்து மரியாதை
சுதந்திரப் போராட்ட வீரர் வ.உ. சிதம்பரனாரின் 154 வது பிறந்த நாளையொட்டி திருச்சி கோர்ட்டு அருகில் உள்ள அவரது சிலைக்கு மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் சீனிவாசன் மற்றும் ஜெயலலிதா பேரவை மாநில துணை செயலாளர், கவுன்சிலர் அரவிந்தன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அருகில் ஜெயலலிதா பேரவை மாநில துணை செயலாளர, ஜோதிவாணன், துணைச்செயலாளர் பத்மநாதன், இளைஞரணி மாவட்ட செயலாளர் ரஜினிகாந்த், இலக்கிய அணி மாவட்ட செயலாளர்
செக்கிழுத்த செம்மல் அய்யா வ.உ.சி. அவர்களின் 154-வது பிறந்தநாளில் மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்திய துரை வைகோMP.
செக்கிழுத்த செம்மல் அய்யா வ.உ.சி. அவர்களின் 154-வது பிறந்தநாளில் மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தினேன். நாட்டின் விடுதலைக்காக ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடியதால் அவர் சிறைக் கொட்டடியில் பூட்டப்பட்டு, செக்கிழுத்து பல்வேறு சித்ரவதைகளுக்கு ஆளானார். அதனால் அவர் செக்கிழுத்தச் செம்மல் என்று அழைக்கப்பட்டார். ஆங்கிலேயர்களின் வணிகத்தை தடுத்து நிறுத்திட முதல் சுதேசிக் கப்பலை கடலில் செலுத்தியதால், அவர் கப்பலோட்டிய தமிழன் என்று அழைக்கப்பட்டார். வ.உ.சி. அவர்கள் பௌத்தம், சைவம், கிறித்தவம்,
மாநகராட்சி குடிநீருக்காக 40 ஆண்டுகள் தவம் – மாமன்ற உறுப்பினர் அரவிந்தன் முயற்சியால் ஒரே மாதத்தில் வெற்றி
திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்கு உட்பட்ட 14 வது வார்டு திருவள்ளுவர் நகரில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக மாநகராட்சி குடிநீர் கிடைக்காமல் மக்கள் போராடி வந்தனர் பலமுறை மாநகராட்சி நிர்வாகிகளிடம் கோரிக்கை வைத்தும் எந்தவித பலனும் இல்லாமல் இருந்து வந்தனர் இந்த சூழலில் மாமன்ற தேர்தலில் 14வது வார்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்ற மாமன்ற உறுப்பினர் அரவிந்தன் அவர்களின் கவனத்திற்கு மக்கள் கோரிக்கை



