
ரஷ்யாவில் சிக்கிய மாணவன் – மீட்கப்போராடும் துரை வைகோMP
ரஷ்யாவில் போர்முனையில் சிக்கித் தவிக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த மருத்துவ மாணவர் கிஷோர் சரவணன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான இந்தியர்களை பாதுகாப்பாக மீட்டு இந்தியாவிற்கு அழைத்து வருவதற்காக, நான் தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறேன். இதற்காக, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், வெளியுறவுத்துறை அமைச்சர், வெளியுறவுத்துறை செயலாளர் மற்றும் ரஷ்யாவின் துணைத் தூதரைச் சந்தித்து கோரிக்கைகளை முன்வைத்து, இதுவரையிலான நிலவரத்தை எடுத்துரைத்துள்ளேன். இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், எனது கோரிக்கையின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள்

Chartered Tax Practitioner பட்டமளிப்பு விழா
தமிழ்நாடு வரி சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பாக அதன் தலைவர்எஸ் .ஏ. முருகையன் மற்றும்பொதுச் செயலாளர் திரு.ஜெய்சங்கர் மற்றும் அனைத்து ஈசி மெம்பர்கள் சார்பாக2025 ஆம் வருடம் ஆகஸ்ட் மாதம் 16, 17 தேதிகளில் நடந்த Chartered Tax Practitioner பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு பட்டங்களை வாங்கிய ஒவ்வொரு Chartered Tax Practitioner -களுக்கும் எங்களது தமிழ்நாடு வரி ஆலோசகர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பாக வாழ்த்தி மகிழ்கின்றோம். இது நாள் வரை

அன்பில் அறக்கட்டளை அப்போலோ மருத்துவமனை இணைந்து நடத்தும் மருத்துவ முகாம்
திருவெறும்பூர் நவல்பட்டு ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இம்முகாம் நடைபெற்று வருகிறது இம்முகம்மிணை திருவெறும்பூர் பகுதி மக்கள் பங்குபெற்று பயன் பெற்று வருகின்றனர்.முகாமில் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு, ரத்த அழுத்தம் சரிபார்த்தல், இசிஜி எடுத்தல், நுரையீரல் பரிசோதனை நடைபெறுகிறது பொது மருத்துவர் ஆலோசனை வழங்கப்படுகிறது . முகாமில் அன்பில் அறக்கட்டளையின் சார்பாக முதலுதவி பெட்டி வழங்கப்பட்டதுஇந்நிகழ்வில் மாநகரக் கழகச் செயலாளர்மு.மதிவாணன் மாவட்டத் துணைச் செயலாளர் செங்குட்டுவன் பகுதி கழகச்

மீட்டெடுக்கப்பட்ட மதிமுக – துரை வைகோவின் மதிநுட்ப அரசியல் – சக்கர வியூகத்தை உடைத்த சாணக்கிய வியூகம்
கடந்த ஆறு ஆண்டுகளாக தேர்தலில் போட்டியிடாத ஆறு அரசியல் கட்சிகளுக்கு இந்திய தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அவர்களை வருகின்ற 28ஆம் தேதி அன்று நேரில் ஆஜராகுமாறு உத்தரவு பிறப்பித்துள்ளனர். கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் இந்தியா கூட்டணியில் அங்கம் வகித்து தேர்தலில் போட்டியிட்டது. மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோ அவர்களின் மகன் துரை வைகோ அவர்கள் திருச்சிராப்பள்ளி பாராளுமன்ற

தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் (Secondary Grade Teachers) காலி பணி இடங்களை தகுதி தேர்வு மற்றும் நியமன தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளவர்களுக்குநிரந்தர பணி நியமன ஆணை வழங்கிடுக – துரை வைகோMP
தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் (Secondary Grade Teachers) காலி பணி இடங்களை தகுதி தேர்வு மற்றும் நியமன தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளவர்களுக்குநிரந்தர பணி நியமன ஆணை வழங்கிடுக! தமிழ் நாடு அரசுக்கு துரை வைகோ வேண்டுகோள்! தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையம் அறிவித்த அதிகாரப்பூர்வ SGT – Secondary Grade Teachers (இடைநிலை ஆசிரியர்கள்) ஆசிரியர்கள் காலி பணியிடங்கள் கடந்த 2021 ஆம் ஆண்டு 730 காலியிடங்களும், 2022 ஆம் ஆண்டு 3987

திருச்சியில் உலர் துறைமுகம் – மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை -துரை வைகோ MP
எனது திருச்சி தொகுதியின் தொழில் வளர்ச்சிக்கு மிக முக்கியமான தேவையான Dry Port எனப்படும் உலர் துறைமுகம் அமைப்பதற்கான எனது முயற்சியின் தொடர்ச்சியாக, அதற்குரிய நிலம் ஒதுக்கீடு செய்து தருவதற்காக கோரிக்கையுடன், இன்று (26.08.2025) மாலை 3 மணியளவில் திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. வே.சரவணன் இ.ஆ.ப அவர்களை நேரில் சந்தித்து உரையாடினேன். அப்போது, திருச்சியில் உலர் துறைமுகம் அமைந்தால் அது, தொழில் முதலீடுகளை ஈர்க்கவும், ஏற்றுமதி வளர்ச்சியை மேம்படுத்தவும்,

திருச்சி இரயில்வே கோட்ட மேலாளராக பொறுப்பேற்றுள்ள திரு. பாலக் ராம் நேகி உடன் துரை வைகோMP சந்திப்பு
எனது திருச்சி நாடாளுமன்ற தொகுதியில், திருச்சி இரயில்வே கோட்ட மேலாளராக பொறுப்பேற்றுள்ள திரு. பாலக் ராம் நேகி அவர்களை அவரது அலுவலகத்தில் இன்று (26.08.2025) காலை 10 மணியளவில் சந்தித்து உரையாடினேன். முதலில், புதிதாக பொறுப்பேற்றுள்ள அவருக்கு எனது வாழ்த்துகளையும் வரவேற்பையும் நேரில் தெரிவித்துக் கொண்டேன். ஏற்கனவே, நான் புதுடெல்லியில் இருந்து அவருக்கு அலைபேசியில் அழைத்து வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டதுடன், திருச்சி ஜி-கார்னர் குறித்தும் அந்த உரையாடலில் குறிப்பிட்டு இருந்தேன்.

“மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்” எழுச்சி பயணம் மண்ணச்சநல்லூர், துறையூர், முசிறி, ஸ்ரீரங்கம் ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதிகளிலும் சிறப்பாக நடைபெற்றது – புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் மு.பரஞ்சோதி அறிக்கை
திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் மு.பரஞ்ஜோதி.MA.BL அறிக்கை:- திருச்சி புறநகர் வடக்கு மாவட்டத்தில் மாண்புமிகு கழக பொதுச்செயலாளர், முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர், வருங்கால தமிழக முதலமைச்சர் அண்ணன் புரட்சித் தமிழர் எடப்பாடியார் அவர்களின் “மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்” எழுச்சி பயணம் மண்ணச்சநல்லூர், துறையூர், முசிறி, ஸ்ரீரங்கம் ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதிகளிலும் சிறப்பாக நடைபெற்றது. சிறப்பாக செயல்பட்டு நிகழ்ச்சியை வெற்றி

திருச்சி அண்ணா பிறந்தநாள் விழா மாநாட்டிற்கு ஐந்தாயிரம் மக்களை அழைத்துச்செல்ல திருச்சி தெற்கு மாவட்ட மதிமுக கூட்டத்தில் தீர்மானம்
திருச்சி அண்ணா பிறந்தநாள் விழா மாநாட்டிற்கு ஐந்தாயிரம் மக்களை அழைத்துச் செல்ல முடிவு திருச்சி தெற்கு மாவட்ட மதிமுக கூட்டத்தில் தீர்மானம் மறுமலர்ச்சி திமுக திருச்சி சிறுகனூரில் நடத்துகின்ற அண்ணா பிறந்தநாள் விழா மாநாட்டிற்கு ஐந்தாயிரம் மக்களை அழைத்துச் செல்வது என்று, திருச்சி தெற்கு மாவட்டக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. திருச்சி தெற்கு மாவட்ட மறுமலர்ச்சி திமுக செயற்குழுக் கூட்டம் திருச்சி மாவட்ட மதிமுக அலுவலகத்தில் (மண்ணச்சநல்லூர் நடராசன் மாளிகை)

திருச்சி- ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோயிலை (UNESCO World Heritage Site) உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்திடுக! துரை வைகோMP கோரிக்கை
திருச்சி- ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோயிலை (UNESCO World Heritage Site) உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்திடுக! ஒன்றிய நிதி அமைச்சருடன் சந்திப்பு! திருச்சி தொகுதியில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோயிலை (UNESCO – World Heritage Site) யுனெஸ்கோ உலக பாரம்பரிய தலமாக அறிவிக்க வேண்டும் என்ற நீண்ட கால கோரிக்கை நிலுவையில் இருந்து வருகிறது. இன்று (21.08.25) மாலை ஒன்றிய நிதி அமைச்சர் மாண்புமிகு திருமதி