திருக்கணித பஞ்சாங்க முறைப்படி இன்று சனிப்பெயர்ச்சி
திருநள்ளாறு கோவிலில் அலைமோதும் பக்தர்களின் கூட்டம்.3 மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்து சாமி தரிசனம் செய்யும் பக்தர்கள்.வெள்ளி கவச அலங்காரத்தில் அருள்பாலிக்கும் சனீஸ்வர பகவான்.நள தீர்த்தத்தில் புனித நீராடி எள் தீபம் ஏற்றி வழிபட்ட பக்தர்கள்.வாக்கிய பஞ்சாங்க முறைப்படி 2026ல் சனிப்பெயர்ச்சி- திருநள்ளாறு கோவில் நிர்வாகம்.
தமிழகத்தில் இருந்து குழந்தை கடத்தி செல்லும் கும்பல்.. சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கைது..!
தமிழகத்திலிருந்து குழந்தைகளை கடத்தி செல்லும் வடநாட்டு கும்பல் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சுற்றி வளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மூன்று பேர் கொண்ட கும்பல், தமிழகத்திலிருந்து ஒன்பது குழந்தைகளை கடத்த திட்டமிட்டு இருந்த நிலையில், அந்த கும்பலை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டதில், குழந்தைகளை கடத்தியவர்கள் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த
உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் எங்களுக்கு பாடம் எடுக்க வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்
வெறுப்புணர்வு பற்றி உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் எங்களுக்கு பாடம் எடுக்க வேண்டாம் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த சிறப்பு நேர்க்காணலில், நாட்டில் நிலவும் அரசியல் பிரச்சினைகள் தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளித்திருந்தார். அப்போது, ஹிந்தி எதிர்ப்பு தொடர்பான கேள்விக்கு பதிலளித்த யோகி ஆதித்யநாத், “வாக்கு வங்கி குறைந்துவிட்டதாக உணர்ந்ததால், முதல்வர் ஸ்டாலின் மொழி
இரும்புக்கை மாயாவி.. தமிழ் காமிக்ஸ் சகாப்தம் மறைந்தார்! – காமிக்ஸ் ரசிகர்கள் அஞ்சலி!
பிரபலமான இரும்புக்கை மாயாவி உள்ளிட்ட பல காமிக்ஸ் நாயகர்களை தமிழில் அறிமுகப்படுத்திய முத்து காமிக்ஸ் நிறுவனர் சௌந்தரபாண்டியன் இன்று இயற்கை எய்தினார். தமிழ்நாட்டில் காமிக்ஸ் உச்சம் தொட்டிருந்த நாட்களில் பிரபலமான ஹீரோ என்றால் அது இரும்புக்கை மாயாவிதான். இப்போதும் இரும்புக்கை மாயாவி என்றால் தெரியாத தலைமுறையினரே இருக்க முடியாது. அப்படியான புகழ்பெற்ற இரும்புக்கை மாயாவியை முதன்முதலில் தமிழில் பதிப்பித்தவர் முத்து காமிக்ஸ் நிறுவனர் சௌந்தரபாண்டியன். 1971ம் ஆண்டில் சிவகாசியில் தொடங்கப்பட்ட