கவியரங்கத்தில் அமைச்சர் KN. நேரு
திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் மாண்புமிகு முதலமைச்சர் திரு. M. K. Stalin அவர்களின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சிறப்பு கவிதை கருத்தரங்கம் நடைபெற்றது. “வாழும் சரித்திரம் அவருக்கு வண்ணக் கவிரசம்” என்ற தலைப்பில் நடைபெற்ற இக்கவிதை கருத்தரங்கில் மாண்புமிகு நகர்புற வளர்ச்சி துறை அமைச்சர் KN. நேரு கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் . அப்போது, எந்த சமரசத்திற்கும் இடம் கொடுக்காமல் தமிழ் மொழியையும் – தமிழ்நாட்டையும் காக்க நம் முதல்வர்
திருச்சி திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி கோவிலில் பங்குனி திரு தேரோட்டம்
திருச்சி திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி கோவிலில் பங்குனி திரு தேரோட்டம் இன்று காலை சிறப்பாக தொடங்கியது. திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் உடனுறை அகிலாண்டேஸ்வரி திருக்கோவிலில் பங்குனி மண்டல பிரம்மோற்சவ விழாவின் முக்கிய வைபவமான பங்குனி திருத்தேரோட்டம் இன்று மார்ச் 30ஆம் தேதி காலை 7:30 மணி அளவில் தொடங்கியது. பஞ்சபூத தலங்களில் நீர் தலமாக விளங்குவது திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவில். திருவானைக்காவல் கோவிலில் பங்குனி மண்டல பிரம்மோற்சவ விழா
கிராம சபை கூட்டத்தில் திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மா. பிரதீப் குமார்.இ.ஆ.ப.,
உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு இன்று (29.03.2025) திருச்சிராப்பள்ளி மாவட்டம், துறையூர் ஊராட்சி ஒன்றியம், கீரம்பூர் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மா. பிரதீப் குமார்.இ.ஆ.ப., அவர்கள் சிறப்பு பார்வையாளராக பங்கேற்று சிறப்புரையாற்றி தூய்மை பணியாளர்கள் மற்றும் தூய்மை காவலர்களுக்கு பொன்னாடை அணிவித்து அவர்களது பணியினை பாராட்டினார். இந்நிகழ்வில் முசிறி வருவாய் கோட்டாட்சியர் திருமதி.இ.ஆரமுத தேவசேனா, திட்ட அலுவலர் (மகளிர் திட்டம்) திரு.சுரேஷ் உதவி
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம் மாண்புமிகு மேயர் மு.அன்பழகன் அவர்கள் தலைமையில், மாநகராட்சி ஆணையர் திரு.வே. சரவணன் இ.ஆ.ப., துணை மேயர் திருமதி.ஜி.திவ்யா ஆகியோர் முன்னிலையில் இன்று 28.03.2025 நடைபெற்றது. இக்கூட்டத்தில் நகரப்பொறியாளர் திரு.பி.சிவபாதம், மண்டலத் தலைவர்கள் திருமதி ஆண்டாள் ராம்குமார், திரு.மு.மதிவாணன் , திருமதி. துர்கா தேவி, திருமதி.பு.ஜெய நிர்மலா திருமதி. விஜயலட்சுமி கண்ணன், மற்றும் நகர் நல அலுவலர் மாமன்ற உறுப்பினர்கள் மாநகராட்சி உதவி ஆணையர்,
ரூ.7.79 கோடி வரி பாக்கியை உடனே செலுத்த வேண்டும்: ஜூஸ் கடைக்காரருக்கு IT நோட்டீஸ்
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் ஜூஸ் கடை வைத்து தினமும் நூற்றுக்கணக்கில் மட்டுமே சம்பாதித்து வரும் ஒருவருக்கு, ரூ.7.79 கோடி வருமான வரி பாக்கி செலுத்த வேண்டும் என வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம், அலிகார் மாவட்டத்தின் நீதிமன்ற வளாகத்தில் சிறிய அளவில் ஜூஸ் கடை நடத்தி வருபவர் முகமது ரஹீம். இவரது மொத்த வருமானம் தினசரி 500 முதல் 1000 ரூபாய் வரை
6 மாநில கேஸ் லாரிகள் காலவரையற்ற வேலைநிறுத்தம்! – கேஸ் பற்றாக்குறை ஏற்படும் அபாயம்!
எண்ணெய் நிறுவனங்களின் புதிய டெண்டர் முறையை எதிர்த்து கேஸ் லாரிகள் உரிமையாளர்கள் சங்கம் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ளது. மத்திய அரசின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களின் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து சமையல் கியாஸை பாட்லிங் மையங்களுக்கு கொண்டு செல்ல தனியார் கேஸ் லாரிகள் ஒப்பந்த அடிப்படையில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. சமீபத்தில் இவற்றிற்கான ஒப்பந்த காலம் முடிந்த நிலையில், புதிய ஒப்பந்தங்களுக்கு ஏப்ரல் 15 வரை விண்ணப்பிக்கலாம் என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
தாம்பரம் – வேளச்சேரி – கிண்டி மெட்ரோ ரயில்.. விரைவில் இயங்கும் என தகவல்..!
தாம்பரம் முதல் வேளச்சேரி வழியாக கிண்டி வரை 21 கிலோமீட்டர் தொலைவிலும், கலங்கரை விளக்கத்திலிருந்து தலைமைச் செயலகம் வழியாக சென்னை உயர்நீதிமன்றம் வரை 6 கிலோமீட்டர் தொலைவிலும் மெட்ரோ ரயில் சேவையை விரிவாக்கும் இரண்டாம் கட்ட திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கான முழுமையான திட்ட அறிக்கைகளை தயாரிக்க தேசிய அளவிலான ஆலோசனை நிறுவனத்திடம் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் கோரிக்கை வைத்துள்ளது. இந்த பாதையின் மொத்த நீளம், ரயில் நிலையங்கள்,
இரும்பு மனிதர் வல்லபாய் பட்டேலின் மறு உருவம் தான் அமித்ஷா: ஆர்பி உதயகுமார்
இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லப்பாய் படேலின் மறு வடிவமாக உள்துறை அமைச்சர் அமித் ஷா பார்க்கப்படுவதாக அதிமுக முன்னாள் அமைச்சரும் எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார். கடந்த செவ்வாய்க்கிழமை டெல்லிக்கு பயணம் மேற்கொண்ட அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நேரில் சந்தித்து 2 மணிநேரத்துக்கு மேலாக ஆலோசனை நடத்தினார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் கூட்டணி
லாரி கவிழ்ந்து விபத்து! சாலையில் சிதறிய தர்பூசணிகள்! அள்ளிச்சென்ற மக்கள்!
செங்கல்பட்டு அருகே லோடு லாரி கவிந்து விபத்துக்குள்ளான நிலையில் சாலையில் சிதறிய தர்பூசணிகளை மக்கள் அள்ளிச் சென்றுள்ளனர் தற்போது வெயில் காலம் தொடங்கியுள்ளதால் தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு தர்பூசணிகள் அதிகளவில் அனுப்பப்பட்டு வருகின்றன. அவ்வாறாக தர்பூசணி ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று வந்த நிலையில் செங்கல்பட்டு அருகே மாதுராந்தகம் சாலையில் பழுதாகி நின்றுள்ளது. லாரி பழுதாகி நிற்பது தெரியாமல் அவ்வழியாக வந்த மற்றொரு லாரி நின்று கொண்டிருந்த லாரி
வெளியே வராதீங்க! இன்று முதல் கொளுத்தப் போகும் கடும் வெயில்! 10 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!
தமிழ்நாட்டில் வெப்பம் அதிகரித்து வரும் நிலையில் இன்று முதல் 10 மாவட்டங்களில் வெயில் கடுமையாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தமிழ்நாட்டில் மழை சீசன் முடிந்த நிலையில் கோடைக்காலம் தொடங்கியுள்ளது. பல பகுதிகளிலும் நாளுக்கு நாள் வெப்பம் அதிகரித்து வரும் நிலையில் மதிய வேளைகளில் மக்கள் வெளியே செல்ல முடியாத அளவு வெப்பம் நிலவுகிறது. இந்நிலையில் இன்று முதல் தமிழகத்தின் பல பகுதிகளில் வெப்பம் மேலும் அதிகரிக்கும்