
பயணிகளுக்கு ஓட்ட பந்தயத்திற்கு பயிற்சியளிக்க வேண்டும்- கூறுகிறார் மக்கள் நீதி மய்ய மாவட்ட செயலாளர்
பயணிகளுக்கு ஓட்ட பந்தயத்திற்கு பயிற்சியளிக்கவேண்டும் (அ) பேருந்து நிறுத்தத்தில் பேருந்தை நிறுத்தவதை உறுதிசெய்ய வேண்டும்…??? திருச்சி மாநகரில் பெரும்பாலான பேருந்துகள் பேருந்து நிறுத்தத்தில் நிற்பதேயில்லை என பயணிகள் குற்றம் சாட்டுகிறார்கள். இதனால் குறிப்பாக பீக்ஹவர்சில் மாநகரே போக்குவரத்து நெரிசலில் தத்தளிப்பதாக வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டுகிறார்கள். பேருந்து நிறுத்தத்தில் பேருந்தை நிறுத்தி பயணிகளை ஏற்றி, இறக்க வேண்டும் என்பது விதி. ஆனால் அந்த விதியை பெரும்பாலான பேருந்து ஓட்டுநர்கள் மதிப்பதேயில்லை.

திருச்சியில் Dry Port – உலர் துறைமுகம் (உள்நாட்டு கொள்கலன் கிடங்கு) அமைப்பதற்கான நீண்டகாலக் கோரிக்கையை வலியுறுத்திய துரை வைகோMP
திருச்சிராப்பள்ளி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் துரை வைகோ அவர்கள் இன்று (18.08.2025), மாண்புமிகு ஒன்றிய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழித்துறை அமைச்சர் திரு. சர்பானந்த சோனோவால் அவர்களை, அவரது அலுவலகத்தில் சந்தித்து, திருச்சியில் Dry Port – உலர் துறைமுகம் (உள்நாட்டு கொள்கலன் கிடங்கு) அமைப்பதற்கான நீண்டகாலக் கோரிக்கையை வலியுறுத்தி, இது தொடர்பான வேண்டுகோளை முன்வைத்தார். உலர் துறைமுகம் என்பது உலகளாவிய விநியோகச் சங்கிலியில் முக்கியப் பங்காற்றும் உள்நாட்டு

79 ம் ஆண்டு சுதந்திர தினம் – தேசியக்கொடி ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கிய காங்கிரஸ் நிர்வாகிகள்
79 வது சுதந்திர திருநாளை முன்னிட்டு காந்தி மார்க்கெட் கோட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் கோட்டத் தலைவர் சந்து கடை சம்சுதீன் தலைமையில் மூத்த தலைவர்கள் கள்ளத்தெரு குமார் வெள்ளமண்டி பாலசுப்பிரமணியன் மார்க்கெட் மாரியப்பன் ஆகியோர் முன்னிலையில் விழா நடைபெற்றது.இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளர் வழக்குரைஞர் எம் சரவணன் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றிவைத்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி மகாத்மா காந்தி

79 வது சுதந்திர தினம் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செய்த திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் மாவட்ட தலைவர் மாமன்ற உறுப்பினர் திரு. எல். ரெக்ஸ்
இந்திய திருநாட்டின் 79 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் மாவட்ட தலைவர் மாமன்ற உறுப்பினர் திரு. எல். ரெக்ஸ் அவர்கள் தியாகி அருணாச்சலம் மன்றத்தில் தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தி நிர்வாகிகளுக்கு இனிப்பு கள் வழங்கினார். காட்டூர் – பாலாஜி நகர் நலசங்கத்தில் தேசிய கொடியினை ஏற்றினார். அகில இந்திய செயலாளர் கிறிஸ்டோபர் திலக் அவர்கள் சிறப்புரையாற்றினார். மார்க்கெட் கோட்ட தலைவர்

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் Bdo அலுவலகம் முற்றுகை, தஞ்சாவூர் சாலை மறியல்
. தமிழ் நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாத்துக்காப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பாக திருவெறும்பூர் ஒன்றியத்தில் முற்றுகை மறியல் செய்து சாலையை ஸ்தம்பிக்க வைத்த மாற்றுத்திறனாளிகள், மாதாந்திர மாற்றுத்திறனாளிகள் குறைதீர் முகாம் நடைபெறுவதாக Bdo விடம் இருந்து முறைப்படி கடிதம் அனுப்பப்பட்டது. சங்கம் சார்பாக மாற்றுத்திறனாளிகள் 50 பேர் கலந்து கொள்ள ஏற்பாடு செய்து திருவெறும்பூர் ஒன்றிய செயலாளர். என்ற அடிப்படையில் J. சித்ரா, வழிகாட்டுதல் செய்து 3.00pm

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் வான்வழி விரைவஞ்சல் சரக்கு (Air Courier Cargo) வசதியை செயல்படுத்த வேண்டி கோரிக்கை – துரை வைகோ mp
இன்று (12.08.2025) மாலை, மாண்புமிகு ஒன்றிய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு. ராம் மோகன் நாயுடு அவர்களை அவரது நாடாளுமன்ற அலுவலகத்தில் சந்தித்து, திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் வான்வழி விரைவஞ்சல் சரக்கு (Air Courier Cargo) வசதியை செயல்படுத்த வேண்டி கோரிக்கை கடிதம் கொடுத்து வேண்டுகோள் விடுத்தேன். திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் இவ்வசதியை அமல்படுத்த 2022-இல் ஒன்றிய அரசின் சுங்கத் துறை ஏற்கனவே அறிவித்திருந்ததை சுட்டிக்காட்டி,

பெருமழையில் சாய்ந்து விழுந்த வேப்பமரம் ஸ்ரீரங்கம் முழுவதும் மின்விநியோகம் துண்டிப்பு
ஸ்ரீரங்கம் புலி மண்டபம் சாலையில் இன்று மாலை சுமார் ஆறு மணி அளவில் மழையின் காரணமாக வேப்பமரம் ஒன்று முறிந்து விழுந்தது அதன் காரணத்தினால் நகர் முழுவதும் மின் வினியோகம் முற்றிலும் பாதிக்கப்பட்டது தகவல் அறிந்த மின்வாரிய அதிகாரிகள் மின்வாரிய பணியாளர்களுடன் சம்பந்தப்பட்ட இடத்திற்கு நேரில் சென்று கொட்டும் மழையிலும் தங்கள் உயிரை துச்சம் என மதித்து மின்விநியோகம் சீர் பெறுவதற்கான ஒழுங்கு நடவடிக்கைகளை எடுத்தனர் கிட்டத்தட்ட 3 மணி

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி திருச்சி வருகை முன்னாள் அமைச்சர்கள் கழக நிர்வாகிகள் கள ஆய்வு
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்கள் திருச்சி வருகையை முன்னிட்டு இன்று காலை 10 மணி அளவில் எடப்பாடி கே பழனிச்சாமியின் மக்கள் சந்திப்பு நடைபெற உள்ள திருச்சிராப்பள்ளி காந்தி மார்க்கெட் மரக்கடை எம்ஜிஆர் சிலை பகுதியை முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, விஜயபாஸ்கர், வளர்மதி, மு பரஞ்சோதி, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரத்தினவேல், முன்னாள் ஆவின் சேர்மன் கார்த்திகேயன், திருச்சி மாநகர் மாவட்ட

மூத்தோர்களுக்கான பராமரிப்பு நடைபயணம் – “பொன்னான முதுமைக்கு கண்ணியமான கவனிப்பு காலமெல்லாம்! ”
மூத்தோர்களுக்கான பராமரிப்பு நடைபயணம் – “பொன்னான முதுமைக்கு கண்ணியமான கவனிப்பு காலமெல்லாம்! ” திருச்சி எலும்பியல் சங்கம் (TOS) சார்பில், IOA எலும்பு & மூட்டு தினம் (ஆகஸ்ட் 4, 2025) மற்றும் எலும்பு & மூட்டு வாரம் (ஆகஸ்ட் 3–10, 2025) நினைவாக, நடைபயணம் 2025 ஆகஸ்ட் 10 ஞாயிற்றுக்கிழமை காலை 6:00 மணிக்கு அண்ணாநகர், திருச்சி உழவர் சந்தை இடமிருந்து துவங்குகிறது. இந்த ஆண்டின் தலைப்பு “பொன்னான

மாவட்ட துணை ஆட்சியருடன் ரக்ஷா பந்தன் கொண்டாடிய விஹச் பி நிர்வாகிகள்
ரக்ஷா பந்தன் முன்னிட்டுவிசுவ ஹிந்து பரிஷத் சார்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட துணை ஆட்சியர் அவர்களுக்கும் ராணுவ வீரர்களுக்கும் துர்கா வாஹினி மாவட்ட பொறுப்பாளர் தனுஸ்ரீ சண்முகம் அவர்கள் தலைமையில் ராக்கி அணிவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் கோட்டப் பொறுப்பாளர் திருமதி பிரபாவதி, மாவட்ட செயலாளர் சீனிவாசன், இணை செயலாளர் அழகு யுவராஜ், பிரகண்ட பொறுப்பாளர்கள் சுந்தர்ராஜ், விஜயகுமார், செல்வி ப்ரீத்தி, செல்வி துர்காஸ்ரீ ஆகியோர் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்.