மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை புது தில்லியிலுள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்த துரை வைகோ எம்.பி
. இந்தச் சந்திப்பின்போது, 2026 ஒன்றிய பட்ஜெட்டில் நாட்டில் ஐந்து இடங்களில் பல்கலைக்கழக நகரங்கள் (University Township) அமைக்கபடும் என்கிற திட்டத்தில் நாட்டின் மிகச் சிறந்த பல கல்வி நிலையங்களை தன்னகத்தே கொண்டுள்ள, தமிழகத்தின் கல்வி மையமாக (Educational Hub) விளங்கும் மற்றும் மாண்புமிகு நிதி அமைச்சர் உட்பட பல தேச மற்றும் சர்வதேச ஆளுமைகளை உருவாக்கிய திருச்சி மாநகரத்தில் இந்த பல்கலைக்கழக நகரம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை
ஸ்ரீரங்கம் இரயில் நிலையம் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய இரயில்வே அமைச்சரை சந்தித்த துரை வைகோ MP.
இன்று( 04.02.2026) மாண்புமிகு ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அவர்களை புது தில்லியிலுள்ள அவரது அலுவலகத்தில் துரை வைகோ MP சந்தித்தார். திருச்சி நாடாளுமன்றத் தொகுதியைச் சார்ந்த முக்கியமான கோரிக்கைகளை அவரிடம் விரிவாக முன்வைத்தார். முதலாவதாக, ஜி கார்னர் போக்குவரத்து சந்திப்பில் உள்ள போக்குவரத்து ஒழுங்கின்மைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டிய அவசியத்தையும், அதற்கு துரை வைகோ மேற்கொண்டுள்ள தொடர் முயற்சியின் நகர்வுகள் குறித்து எடுத்துரைத்தார், ஜி கார்னர் பகுதியில்
திருச்சி இளைஞர் விடுதி புனரமைப்பு குறித்து துரை வைகோ MP கேள்விக்கு மாண்புமிகு ஒன்றிய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் எல். மாண்டவியா அவர்கள் எழுத்துப்பூர்வமாக வழங்கிய பதிலும் அதுகுறித்த துரை வைகோ வின் தொடர் நடவடிக்கையும்.
திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில், கடந்த 26.10.2025 அன்று திருச்சி, காஜாமலை, ரேஸ் கோர்ஸ் சாலையில் அமைந்துள்ள முன்னர் நேரு யுவா கேந்திரா என்று அழைக்கப்பட்ட, தற்போது மேரா யுவா பாரத் (Mera Yuva Bharat – MY Bharat) எனப்படும் அலுவலகத்தையும், அதனுடன் இணைந்த இளைஞர் விடுதியையும் (Youth Hostel) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார் துரை வைகோ எம்பி . நேரு யுவா கேந்திரா என்பது ஒன்றிய அரசின்
துரை வைகோ அவர்களின் தொடர் சாதனை -திருவெறும்பூரில் சோழன் விரைவு ரயில் நின்று செல்கிறது
திருச்சி நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினராக துரை வைகோ வெற்றி பெற்ற ஒன்றரை ஆண்டுகளில், பல்வேறு மக்கள் நலப்பணிகளைச் செய்து வருகிறார். அதில், இன்று பெரும் மகிழ்ச்சியான செய்தி, அவரது கோரிக்கையை ஏற்று மத்திய ரயில்வே துறையின் உத்தரவின்படி, சோழன் விரைவு ரயில் திருவெறும்பூர் ரயில் நிலையத்தில் நின்று சென்றது. திருவெறும்பூர் மக்களுடன், துரை வைகோ வும் இணைந்து அந்த ரயிலை வரவேற்று மகிழ்ந்தார். திருவெறும்பூரில் சோழன் விரைவு ரயில் நிற்கவேண்டும்
ஸ்ரீரங்கம், திருவானைக்காவில் அமித்ஷா சுவாமி தரிசனம்
திருவானைக்கா அருள்மிகு ஜம்பிகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோயில் இன்று காலை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சாமி தரிசனம் செய்தார் திருவானைக்கா கோயில் வடக்கு வாசல் வழியாக 10:45 மணிக்கு வருகை தந்தார் அவரை இந்து சமய அறநிலைத்துறை மண்டல இணை ஆணையர் ஞானசேகரன் தலைமையில் வெள்ளி குடத்தில் பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்கப்பட்டது அதனைத் தொடர்ந்து அம்மன் சன்னதியில் உள்ள பிரசன்ன விநாயகரை தரிசித்து விட்டு மூலவர் அகிலாண்டேஸ்வரி தரிசனம்
திருச்சி BHEL நிறுவனத்தில் பணி புரியும் ஒப்பந்த தொழிலாளர்களை சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி பணி நிரந்தரம் செய்ய துரை வைகோ MP கோரிக்கை
திருச்சி BHEL நிறுவனத்தில் பணி புரியும் ஒப்பந்த தொழிலாளர்களை சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி பணி நிரந்தரம் செய்திடுக! மாண்புமிகு ஒன்றிய கனரக தொழில்துறை அமைச்சர் அவர்களை சந்தித்து கோரிக்கை விடுத்தேன். திருச்சி BHEL நிறுவனத்தில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களை சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி (WP 20302 of 2023, dated 05.12.2025) பணி நிரந்தரம் செய்ய வேண்டி மாண்புமிகு கனரக தொழில்துறை அமைச்சர் திரு. எச்.டி. குமாரசாமி அவர்களை இன்று
திருச்சி மாநகரில், கோட்டை இரயில் நிலையம் அருகே அமைந்துள்ள மேரிஸ் மேம்பால மறுகட்டுமானப் பணியை விரைந்து முடிக்கு துரை வைகோ mp வலியுறுத்தல்
திருச்சி மாநகரில், கோட்டை இரயில் நிலையம் அருகே அமைந்துள்ள மேரிஸ் மேம்பால மறுகட்டுமானப் பணியை விரைந்து முடித்திடுக! மாண்புமிகுஒன்றிய இரயில்வே அமைச்சரை சந்தித்து கடிதம் வழங்கினேன்! திருச்சி மாநகரில், கோட்டை இரயில் நிலையம் அருகே அமைந்துள்ள மேரிஸ் மேம்பால மறுகட்டுமானப் பணி தாமதமாக நடைபெற்று வருகிறது, விரைந்து முடிக்க வேண்டும் என்று குறிப்பிட்டு மாண்புமிகு ஒன்றிய இரயில்வே துறை அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் அவர்களை புதுதில்லியில் உள்ள அவரது
பசுமை நெடுஞ்சாலைகள் திட்டங்களின் தற்போதைய நிலை குறித்து தெரிவிக்கமாண்புமிகு ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரியுடன் துரை வைகோ MP சந்திப்பு!
பசுமை நெடுஞ்சாலைகள் திட்டங்களின் தற்போதைய நிலை குறித்து தெரிவிக்கமாண்புமிகு ஒன்றிய அமைச்சர் திரு. நிதின் கட்கரி அவர்களுடன் சந்திப்பு! மாண்புமிகு சாலைப் போக்குக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் திரு. நிதின் ஜெய்ராம் கட்கரிஅவர்களை இன்று (19.12.2025) பாராளுமன்ற வளாகத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்து திருச்சி – கரூர் – கோவை பசுமை நெடுஞ்சாலைத் திட்டம், 2. சென்னை – திருச்சி – தூத்துக்குடி பசுமை நெடுஞ்சாலைத் திட்டம், 3.
திருச்சி BHEL நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு முறையான ஓய்வூதியம் வழங்க வேண்டும் – துரை வைகோ MP கோரிக்கை
இன்று (17.12.2025) மதியம் 2 மணியளவில், மாண்புமிகு ஒன்றிய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா அவர்களை அவரது அலுவலகத்தில் சந்தித்து, திருச்சி BHEL நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு முறையான ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை கடித்தை கொடுத்து அதன் விவரங்களை எடுத்துரைத்தேன். எனது திருச்சி நாடாளுமன்ற தொகுதியில், திருச்சியில் உள்ள BHEL நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற 2700 ஊழியர்கள், தாங்கள்
திருச்சியில் இந்திய தரநிலைகள் பணியகம் (Bureau of Indian Standards – BIS) அலுவலகம் அமைக்கப்பட வேண்டுமென வலியுறுத்தினார் துரை வைகோ MP
எனது திருச்சி நாடாளுமன்ற தொகுதி தொழில் துறையினருக்காகவும், மத்திய மற்றும் தென் தமிழ்நாட்டுத் தொழில்துறையினரின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையிலும், இன்று (15.12.2025) காலை 11:30 மணியளவில், மாண்புமிகு ஒன்றிய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சர் திரு. பிரலாத் ஜோஷி அவர்களை நாடாளுமன்ற வளாகத்தில் அமைந்துள்ள அவரது அமைச்சக அலுவலகத்தில் நேரில் சந்தித்தேன். அப்போது, திருச்சியில் இந்திய தரநிலைகள் பணியகம் (Bureau of Indian Standards


