
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உடன் துரை வைகோ எம்பி சந்திப்பு
மாண்புமிகு ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர். எஸ். ஜெய்சங்கர் அவர்களை இன்று (07.08.2025) மதியம் 1 மணியளவில் அவரது அலுவலகத்தில் சந்தித்து, ரஷ்யாவில் சிக்கிக்கொண்டுள்ள இந்திய மருத்துவ மாணவன் கிஷோர் சரவணன் மீட்கப்படுவதற்கு நேற்று நான் அளித்த விளக்கங்களை கோடிட்டு காட்டியபோது அமைச்சர் சில விளக்கங்களை அளித்தார். இதுகுறித்து அவர் ரஷ்ய உயர் அதிகாரிகளிடம் பேசியபோது, கிஷோர் சரவணன் தனது வழக்கில் தண்டனையை ரத்துசெய்ய ரஷ்ய குடியுரிமை பெற்றுக்கொண்டு போருக்கு

வாக்குறுதிகளை செவ்வனே நிறைவேற்றும் துரை வைகோ mp
சோழமாதேவி தார்ச் சாலை கோரிக்கை நிறைவேறியது. எனது திருச்சி நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதியில், ஐ.டி. பார்க் சாலை சீரமைக்க வேண்டும் என்ற என் கோரிக்கை ஏற்கப்பட்டு புதிய தார்ச் சாலை அமைக்கப்பட்டது. அந்தப்பணியை 09.06.2025 அன்று, மாநில நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளுடன் சென்று பார்வையிட்டு அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்தேன். அப்போது, சோழமாநகர் மக்கள் நல மன்றம் நிர்வாகிகள் என்னிடம் ஒரு கோரிக்கை மனு வழங்கினார்கள். அதில்,

முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் டாக்டர் மு.கருணாநிதி அவர்களின் ஏழாம் ஆண்டு நினைவு தினம் – புதுடெல்லியில், அண்ணா-கலைஞர் அறிவாலயத்தில் உள்ள கலைஞர் சிலைக்கு துரை வைகோ எம்பி மலர்மாலை அணிவித்து மரியாதை
முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் ஏழாம் ஆண்டு நினைவு நாளான இன்று (07.08.2025) காலை 9:30 மணியளவில், புதுடெல்லியில், அண்ணா-கலைஞர் அறிவாலயத்தில் அமைந்துள்ள கலைஞர் அவர்களின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்தும், அவரது திருவுருவப்படத்திற்கு மலர்த்தூவியும், மறுமலர்ச்சி திமுக சார்பில் நான் புகழ் வணக்கம் செலுத்தினேன். நூறாண்டு கடந்திருக்கிற திராவிட இயக்கத்தில் அரை நூற்றாண்டு காலம் தலைமை வகித்த பெருமை டாக்டர் கலைஞர் அவர்களுக்கு உண்டு. தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா

போர்க்களத்தில் கருக காத்திருக்கும் இளம் தளிர் மீட்டெடுக்கும் விடாமுயற்சியோடு புது தில்லியில் போராடி வருகிறார் நம் தாயுமானவர்
இன்று (06.08.2025) காலை மருத்துவக் கல்விக்காக ரஷ்யா சென்று சிக்கிக்கொண்ட இந்திய மாணவர் கிஷோர் சரவணன், தனது பெற்றோரின் அலைபேசியில் அழைத்து, “இன்னும் சிறிது நேரத்தில் என்னை அழைத்துச் செல்ல வாகனம் வரும், அதற்குள் என்னை தயாராக இருக்க சொல்லியுள்ளார்கள்” என்று கூறியதுடன், அது நேராக போர்முனைக்குத்தான் போகும் போல் தெரிகிறது என்று கூறி மனமுடைந்து அழுதுள்ளார். இந்தத் தகவலை கேள்விப்பட்டவுடன், அதனை விளக்கமாக விவரித்து எழுதி வெளியுறவுத்துறை அமைச்சர்

ஒன்றியத் தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் மாண்புமிகு டாக்டர் மன்சுக் எல். மாண்டவியா உடன் துரை வைகோ mp சந்திப்பு
ஒன்றியத் தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் மாண்புமிகு டாக்டர் மன்சுக் எல். மாண்டவியா அவர்களை, இன்று (05.08.2025) நாடாளுமன்றத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்தேன். அந்தச் சந்திப்பில், எனது திருச்சி நாடாளுமன்றத் தொகுதிக்கான இரு முக்கிய கோரிக்கைகளைக் கொண்ட மனுவை அமைச்சரிடம் வழங்கி, அவை குறித்து விரிவாக எடுத்துரைத்தேன். கோரிக்கைகளின் விவரம்:கோரிக்கை 1: கடந்த 14.12.2016 அன்று நடைபெற்ற பணியாளர்களுக்கான மாநில காப்பீட்டுக் கழகத்தின் (ESIC) 206-வது

தொடர்ந்து ரஷ்யா வில் சிக்கி தவிக்கும் மருத்துவ மாணவனை மீட்க போராடும் நவீன விக்கிரமாதித்தன்
ரஷ்ய இராணுவத்தில் வலுக்கட்டாயமாக சேர்க்கப்பட்டுள்ள, தமிழ்நாட்டை சேர்ந்த மருத்துவ மாணவர் கிஷோர் சரவணனை மீட்க மிக அவசர வேண்டுகோளுக்காக வெளியுறவுத்துறை செயலாளர் திரு. விக்ரம் மிஷ்ரி அவர்களை மீண்டும் இன்று (04.08.2025) மதியம் 2:30 மணியளவில் சந்தித்தேன். மருத்துவ மாணவர் கிஷோர் சரவணனை ரஷ்ய – உக்ரைன் போர்முனையிலிருந்து மீட்க கோரி எனது தொடர் போராட்டத்தில் இன்று பிரதமரை சந்தித்துவிட்டு, உடனே வெளியுறவுத்துறை செயலாளரை சந்தித்தேன். அப்போது, மாணவரிடமிருந்து கிடைத்த

தமிழக மாணவனை மீட்க கோரி பாரதப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து கோரிக்கை வைத்த துரை வைகோ எம்பி
மாண்புமிகு பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களை இன்று (04.08.2025) காலை 12 மணியளவில், அவரது நாடாளுமன்ற அலுவலகத்தில் சந்தித்தேன். ரஷ்யாவில் போர் முனையில் சிக்கித் தவிக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த மருத்துவ மாணவர் கிஷோர் சரவணன் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான இந்தியர்களை பத்திரமாக மீட்டு இந்தியாவுக்கு அழைத்து வர, 15 அரசியல் கட்சிகளைச் சார்ந்த, 68 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்ட கடிதத்தை மாண்புமிகு பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களிடம் அவரது
முக்கியமான இரு பிரச்சனைகள் குறித்து ஒன்றிய வெளியுறவுத்துறைச் செயலாளரைச் சந்தித்த துரை வைகோ mp.
இன்று (31.07.2025) காலை 11:00 மணியளவில், புதுடெல்லியில் உள்ள நாடாளுமன்றத்தின் சவுத் பிளாக் பகுதியில் அமைந்துள்ள வெளியுறவுத்துறை அமைச்சகத்தில், மாண்புமிகு வெளியுறவுத்துறைச் செயலாளர் திரு. விக்ரம் மிஸ்ரி அவர்களைச் நேரில் சந்தித்து, இரு முக்கியமான மற்றும் அவசரமான பிரச்சனைகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார் துரை வைகோ mp அவர்கள். மருத்துவக் கல்விக்காக ரஷ்யா சென்ற இந்தியக் குடிமகன் தமிழ்நாட்டின் கடலூரை சேர்ந்த கிஷோர் சரவணனை எந்நேரத்திலும் ரஷ்ய அரசு, ரஷ்யா

கடலூர் பள்ளி பேருந்து மீது ரயில் மோதிய விபத்து – பாராளுமன்றத்தில் துரை வைகோ mp கேள்வி
கடந்த 08.07.2025 அன்று தமிழ்நாட்டில், கடலூரில் இரயில் பாதை சாலை சந்திப்பை (Railway Level Crossing) கடக்க முயன்ற பள்ளி வாகனம் விபத்துக்குள்ளாகி, அதில் பயணித்த 3 பள்ளி குழந்தைகள் இறந்து போனதும், பலர் காயம் அடைந்ததும் நம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. அந்த கவலைக்குரிய, மோசமான விபத்தை முன்வைத்து , இரயில் பாதை சாலை சந்திப்பில் (Railway Level Crossing) உள்ள MLC எனப்படும் manned level crossing

ரஷ்ய ராணுவத்தில் வலுக்கட்டாயமாக சேர்க்கப்படும் இந்தியர்கள் – மருத்துவ மாணவனின் பெற்றோர்கள் கதறல் – களத்தில் இறங்கிய துரை வைகோ mp – மத்திய அமைச்சர் ஜெயிஷங்கரிடம் நேரிலும் – பாராளுமன்றத்தில் நேரடியாகவும் கோரிக்கை முழக்கம்
மிகுந்த மனவேதனையுடனும், உடனடி தலையீடு கோரும் அவசர வேண்டுகோளுடனும் நேற்று (28.07.2025) மாண்புமிகு ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர், டாக்டர் எஸ். ஜெய்சங்கர் அவர்களை நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் நேரில் சந்தித்து, ரஷ்யாவில், ரஷ்யா – உக்ரைன் போர்முனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிக்கித்தவிக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த மருத்துவ மாணவர் கிஷோர் சரவணன் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட இந்தியர்களை பத்திரமாக மீட்டு இந்தியா அழைத்துவர வேண்டும் என்ற கோரிக்கைக்