திருச்சியில் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு எம்.பி. துரை வைகோ மாலை அணிவிக்கின்றார்.
திருச்சியில் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு எம்.பி. துரை வைகோ மாலை அணிவிக்கின்றார். அனைவரும் பங்கேற்போம் வாரீர்…!பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் 1350-ஆவது சதய விழாவினையொட்டி, 23.05.2025 வெள்ளிக்கிழமை, காலை 10.30 மணிக்கு, திருச்சி ஒத்தக்கடையில் உள்ள பேரரசர் சிலைக்கு மறுமலர்ச்சி திமுக முதன்மைச் செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ அவர்களது தலைமையில், துணைப் பொதுச்செயலாளர் டாக்டர் ரொஹையா அவர்களது முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது.
கண்ணியமான அரசியலுக்கும், களங்கமற்ற தலைமைக்கும் தோள் கொடுங்கள். ஆதாயமில்லா மக்கள் பணிக்கும், சமரசமில்லா மக்கள் நலனுக்கும் கரம் கொடுங்கள்
நான்கே நான்கு ஆசை வார்த்தைகள் கூறினால், ஆயிரமாயிரம் பேர்கள் அணி திரள்வார்கள் என்ற நிலையில், தலைவர் வைகோ அவர்கள் தனது பயணத்தை தெளிவாக வரையறுத்தார், “என்னோடு வந்தால் பட்டமோ பதவியோ கிடைக்காது. இது முள்ளும் கல்லும் நிறைந்த பாதை. செந்நீரும் கண்ணீரும் சிந்த நேரிடும். சிறைச்சாலைக்கும் செல்ல நேரிடும். அதற்கு சித்தமானவர்கள் மட்டும் என் பின்னால் வாருங்கள்.”என்று கூறி, திராவிட இயக்கத்தின் கொள்கை வலிமையுள்ள தூணாக, மாபெரும் இயக்கமாக மறுமலர்ச்சி
அனுபவங்கள் உணர்த்தும் பாடம்.!
கோவில்பட்டியில் இருந்து திருவேங்கடம் செல்லும் வழியில் மைப்பாறை கிராமம் உள்ளது. அங்கே எழில் கொஞ்சும் அழகிய மலை ஒன்று இருக்கிறது. . கடந்த 08.12.2021 அன்று கழகத் தோழர்களுடன் அந்த மலைக்கு சென்று, அரச மர பூங்கா அமைக்கும் கனவில் முன்னூறுக்கும் மேற்பட்ட அரச மரக் கன்றுகளை நட்டேன். இருக்கின்ற மரங்களிலேயே அரச மரத்திற்கு தனிச் சிறப்புகள் பல உண்டு. அதிக அளவில் உயிர்க்காற்றை உற்பத்தி செய்யும் ஆற்றல் அரச
சும்மாவா கிடைத்தது சுதந்திரம் – நெஞ்சு பொறுக்குதில்லையே.
எண்ணற்ற உயிர் தியாகங்கள் செய்து பெற்ற சுதந்திரம். ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15- அன்று அவர்களது தியாகத்தை நினைவு கூறும் வகையில் மத்திய ,மாநில அரசுகள் பல வகையான சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்தி சிறப்பு செய்தாலும் கடந்த காலங்களில் செய்யப்பட்ட சிறப்புகளை கண்டு கொள்ளாமல் உரிய பாராமரிப்பின்றி விட்டு விடுவது இந்தியாவின் சுதந்திரத்தையும், சுதந்திரத்திற்க்காக தியாகம் செய்த தியாகிகளையும் அவமதிப்பு செய்து வருகிறோமோ என்ற மன வேதனை கொள்ள வேண்டியுள்ளது.
ஒரு தேங்காய் பண்ணு கூட சாப்பிட வசதியில்லாத நான்… – கண்ணீர் மல்கிய சூரி!
நான் எட்டாவது படிக்கும்போது, ரொம்ப வறுமை, வேற வழியில்லாம எல்லாத்தையும் உதறித் தள்ளிட்டு திருப்பூர் வந்துட்டேன். அப்போ எனக்கு ஒரு நாளைக்குக் கிடைச்ச கூலி வெறும் 20 ரூபாய் தான். ஒரு வாரத்துக்கு உழைச்சா 140 ரூபாய் கிடைக்கும். அதுல பாதி வீட்டுக்கு அனுப்பிட்டு, மீதி காசுல என் தேவைகளைக்கூடப் பூர்த்தி செய்ய முடியாம தவிச்சிருக்கேன்.அந்த சமயத்துல, திருப்பூர்ல கிடைக்கிற ஒரு சின்ன தேங்காய் பண்ணை சாப்பிடணும்னு எனக்கு எவ்வளோ
திருச்சி மாவட்டம் கீழரசூர் ஊராட்சி தென்னரசூர் பகுதியில் வீட்டுக்குள் தண்ணீர் புகுந்து மக்கள் அவதி
மே 19 திருச்சி மாவட்டம், புள்ளம்பாடி ஒன்றியம் கீழரசூர் ஊராட்சியில் தென்னரசூர் பகுதியில் நேற்று இரவு கோடை கனமழையின் காரணமாக 2 மணி நேரம் விடாமல் பெய்த கோடைகால கனமழையின் காரணமாக கீழரசூர் ஊராட்சி தென்னரசூர் கிராமத்தில் வீட்டிற்குள் தண்ணீர் புகுந்தது. இரவு நேரம் என்பதால் மின்சாரம் இல்லாமல் இடுப்பளவு தண்ணீரில் 10 க்கும் மேற்பட்ட வீடுககளில் உள்ள மக்கள் ஆகிவிட்டனர். தகவல் அறிந்த ஊராட்சி நிர்வாகம் தீயணைப்புத் துறையினருக்கும்
பிறந்த சில நாட்களே ஆன குழந்தைகளுக்கும் ஆஞ்சியோகிராபி சிகிச்சைகள்: திருச்சி மா காவேரி மற்றும் காவேரி ஹார்ட்சிட்டி சாதனை
● 48 மணி நேரமே ஆன, 2 கிலோ எடையுள்ள, பச்சிளம் குழந்தைக்கு உயிர்காக்கும் பலூன் பல்மோனரி வால்வுலோபிளாஸ்டி செய்யப்பட்டது● 11 நாட்களே ஆன, 1.5 கிலோ எடையுள்ள மற்றொரு பச்சிளம் குழந்தைக்கு 4×2 மிமீ அளவுள்ள ஒரு சிறிய சாதனம் பொருத்தப்பட்டு அதன் இதயத்தில் இருந்த அசாதாரண இரத்த நாளம் சரிசெய்யப்பட்டது. திருச்சி, மே 15, 2025:தென் தமிழகத்தில்முதன்முறையாக பிறந்த சில நாட்களே ஆன இரண்டு பெண் குழந்தைகளுக்கு
15 ஆண்டுகால வாழ்க்கை போராட்டம்- துரை வைகோ அவர்களால் விடியல் பெறும் கிராம மக்கள்
நந்தவனம் குடியிருப்புவாசிகளுக்கு அடிமனை வாடகை ரசீது வழங்கிட திருச்சி எம்.பி. துரை வைகோ கோரிக்கை -அறநிலையத் துறை அமைச்சருக்குக் கடிதம். திருச்சி நாடாளுமன்றத் தொகுதி, திருவரங்கம் சட்டமன்றத் தொகுதிக்கு உள்பட்ட திருப்பராய்த்துறை ஊராட்சி, நந்தவனம் அருள்மிகு தாருகாவனேஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான சர்வே எண் 172/2-இல் 35 குடும்பங்கள் சிறிய வீடுகள் அமைத்து, கடந்த பதினைந்து வருடங்களாக வசித்து வருகின்றனர். இக்குடியிருப்புகளில் சுமார் நூறு பேர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு அடிப்படை
தமிழக அரசின் நூலக ஆணையை பெற்ற சங்கொலி வார இதழ்
கடந்த 31 ஆண்டுகளாக தமிழக பத்திரிகை வரலாற்றில் தனித்த அரசியல் அடையாளத்தோடு, தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் அதிகாரப்பூர்வ வார ஏடான சங்கொலி இதழுக்கு, முதன்முதலாக தமிழக அரசின் நூலக ஆணையை பெற்றுக் கொடுத்துள்ளேன். அதற்காகப் பெருமை கொள்கிறேன். நான், நேரடி அரசியலுக்கு வந்த இந்த குறுகிய நான்காண்டு காலத்தில் சங்கொலிக்காக மேற்கொண்ட எனது தொடர் முயற்சிகள் 2022 ஆம் ஆண்டு தொடங்கியவை. 10.12.2022 அன்று
அமைச்சர் மகேஸ் பொய்யாமொழி எழுதிய நூல் வெளியீடு – பாராளுமன்ற உறுப்பினர் துரை வைகோ வாழ்த்து
தமிழ்நாட்டின் உரிமைக் குரலாய் ஒரு கல்விக் குரல் என்ற பெருமையோடு, மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்புச் சகோதரர் திரு. அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் எழுதிய “தேசிய கல்விக் கொள்கை 2020 எனும் மதயானை” என்ற தனது நூலினை, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணன் தளபதி திரு. மு. க. ஸ்டாலின் அவர்களின் கரங்களால் வெளியிட உள்ளார். இந்நூல் வெளியீட்டு விழாவிற்கான அழைப்பிதழை இன்று சென்னை அண்ணா நகர் இல்லத்திற்கு



