
திருச்சி- ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோயிலை (UNESCO World Heritage Site) உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்திடுக! துரை வைகோMP கோரிக்கை
திருச்சி- ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோயிலை (UNESCO World Heritage Site) உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்திடுக! ஒன்றிய நிதி அமைச்சருடன் சந்திப்பு! திருச்சி தொகுதியில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோயிலை (UNESCO – World Heritage Site) யுனெஸ்கோ உலக பாரம்பரிய தலமாக அறிவிக்க வேண்டும் என்ற நீண்ட கால கோரிக்கை நிலுவையில் இருந்து வருகிறது. இன்று (21.08.25) மாலை ஒன்றிய நிதி அமைச்சர் மாண்புமிகு திருமதி

திருச்சியில் உலர் துறைமுகம் அமைக்க ஒன்றிய நிதி அமைச்சர் மாண்புமிகு திருமதி நிர்மலா சீதாராமன் அவர்களுடன் துரை வைகோMP சந்திப்பு
திருச்சியில் உலர் துறைமுகம் அமைக்க ஒன்றிய நிதி அமைச்சர் மாண்புமிகு திருமதி நிர்மலா சீதாராமன் அவர்களுடன் சந்திப்பு! தமிழ்நாட்டின் மையப்பகுதியில் அமைந்துள்ள திருச்சி, சிறந்த விமான போக்குவரத்து மற்றும் இரயில் இணைப்புகளைக் கொண்டிருப்பதால், உலர் துறைமுகத்திற்கு (உள்நாட்டு கொள்கலன் கிடங்கு) மிகவும் ஏற்ற இடமாக உள்ளது. திருச்சியில் ஏற்றுமதி தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், உலர் துறைமுகம் அமைக்கப்பட்டால், தொழில் முதலீடுகளை ஈர்ப்பதுடன், நிலையான ஏற்றுமதி வளர்ச்சியை ஆதரிக்கவும், தொழில்

ரஷ்ய ராணுவத்தில் சிக்கி தவிக்கும் இந்தியர்கள்- விக்ரமாதித்தனை போல மீட்பதற்காக போராடும் துரை வைகோ எம்பி- பிரதமரை நேரில் சந்தித்து துரித நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
ஒருபுறம் இந்தியாவில் நாம் போராடிக் கொண்டிருக்க, மறுபுறம் ரஷ்யாவில் கிஷோர் சரவணன் போர் நடைபெறும் இடத்தில் நிறுத்தப்பட்டுவிட்டாரே என்ற ஆதங்கத்துடன், இன்று (21.08.2025) காலை பிரதமர் அலுவலகத்திற்கு நேரில் சென்று மாண்புமிகு பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களையும், வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கு நேரில் சென்று, வெளியுறவுத்துறை செயலாளர் திரு. விக்ரம் மிஸ்ரி அவர்களையும் சந்தித்து, இந்த விவகாரத்தின் தற்போதைய நிலை குறித்து கீழ்கண்ட கோரிக்கை கடிதத்துடன் விரிவாகப் பகிர்ந்து கொண்டேன்.

தமிழகத்தில் 200 தொகுதிகளுக்கு மேல் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி வெற்றி பெறும்.
தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் அறிக்கை. தமிழகத்தில் 200 தொகுதிகளுக்கு மேல் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி வெற்றி பெறும். ஒரு லட்சம் பாஜக பூத் கமிட்டி நிர்வாகிகளுடன், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் கலந்து கொள்ளும் திருநெல்வேலி முதல் பூத் கமிட்டி மண்டல மாநாடு தமிழக அரசியலில் திருப்புமுனையை ஏற்படுத்தும். தமிழகத்தில் முதல் கட்டமாக, ஒரு லட்சம் பாஜக பூத் கமிட்டி நிர்வாகிகள், வீரத்தின்

விருகம்பாக்கத்தில் பைக் திருட்டு
விருகம்பாக்கத்தில் பைக் திருட்டு சென்னை விருகம்பாக்கம் வெங்கடேச நகரில் நேற்று நள்ளிரவில் வீட்டின் உள்ளே நிறுத்தி வைத்திருந்த Yamaha R15 இருசக்கர வாகனம் திருட்டு இது குறித்து விருகம்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 9 மணியளவில் காவல்துறையில் புகார் அளித்தும் விருகம்பாக்கம் காவல்துறை சிசிடிவி காட்சிகளை கூட ஆய்வு செய்யாமல் அலட்சியம் செய்து வருவது குறிப்பிட்டத்தக்கது. இருசக்கர வாகனம் திருட்டு போய் பல மணி நேரம் கடந்தும்

உலர் துறைமுகம் (உள்நாட்டு கொள்கலன் கிடங்கு) அமைப்பதற்கான கோரிக்கை- துரை வைகோMP
கடந்த 18.08.2025 அன்று, மாண்புமிகு ஒன்றிய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழித்துறை அமைச்சர் திரு. சர்பானந்த சோனோவால் அவர்களை அவரது அலுவலகத்தில் சந்தித்து, திருச்சியில் உலர் துறைமுகம் (உள்நாட்டு கொள்கலன் கிடங்கு) அமைப்பதற்கான கோரிக்கையை வலியுறுத்தி, இது தொடர்பான வேண்டுகோளை முன்வைத்தேன். இதன் தொடர்ச்சியாக, திருச்சி தொகுதியின் தொழில் வளர்ச்சிக்கு இந்த உலர் துறைமுகத்தின் அவசியத்தை கருத்தில் கொண்டு, இன்று (20.08.2025) மாண்புமிகு ஒன்றிய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை

ரஷ்யா- உக்ரைன் போரில் வலுக்கட்டயமாக ஈடுபடுத்தபட்டுள்ள இந்தியர்களை மீட்க சபை ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வருக! துரை வைகோMP மக்களவை செயலாளருக்கு மனு
ரஷ்யா- உக்ரைன் போரில் வலுக்கட்டயமாக ஈடுபடுத்தபட்டுள்ள இந்தியர்களை மீட்க சபை ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வருக! மக்களவை செயலாளருக்கு மனு! பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி ரஷ்ய இராணுவத்தில் வலுக்கட்டாயமாக சேர்க்கப்பட்ட திரு. கிஷோர் சரவணன் உள்ளிட்ட இந்தியர்களின் உயிர்கள் காப்பாற்றபட வேண்டும் என்ற எண்ணற்ற தொடர் முயற்சிகளில ஈடுபட்டு வருகிறேன். இப்பிரச்சனை தொடர்பாக 15 கட்சிகள் மற்றும் 68 நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையெழுத்து பெற்றுபிரதமர் மோடி அவர்களுடன் சந்திப்பு,,வெளியுறவு அமைச்சர்,

திருச்சி விமான நிலையத்தில் International-to-International transit வசதியை மீண்டும் அமல்படுத்துவதற்கான கோரிக்கை
இன்று (19.08.2025) மாண்புமிகு ஒன்றிய விமான போக்குவரத்து துறை அமைச்சர் திரு. ராம் மோகன் நாயுடு அவர்களை அவரது அலுவலகத்தில் சந்தித்து, திருச்சி விமான நிலையத்தில் International-to-International transit வசதியை மீண்டும் அமல்படுத்துவதற்கான கோரிக்கை கடிதத்தை கொடுத்து, அதுகுறித்த தகவல்களை வழங்கினார் துரை வைகோMP. அதில், திருச்சி விமான நிலையம் சமீப காலங்களில், கணிசமான எண்ணிக்கையிலான சர்வதேச விமான சேவைகளை திறம்பட கையாண்டு, வேகமாக வளர்ச்சியடையும் விமான நிலையமாக திகழ்வதை

மக்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்- திரண்ட பொதுமக்கள் – ஒருங்கிணைத்த மாமன்ற உறுப்பினர் கலைச்செல்வி
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மண்டலம் 4 க்கு உட்பட்ட 53 வது வார்டில்உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாமில் மாண்புமிகு மேயர் மு. அன்பழகன் அவர்கள்,ஆணையர் திரு. லி.மதுபாலன் இ.ஆ.ப., ஆகியோர் பொதுமக்கள் மனுக்கள் மீது உடனடி தீர்வு காணப்பட்டு உரியவர்களுக்கு ஆணைகள் வழங்கினார்கள் .

மூப்பனார் 94 வது பிறந்தநாள் – தமாகா விவசாய அணி தலைவர் செல்வம் தலைமையில் காமராஜர் அரங்கத்தில் பிறந்தநாள் விழா
மூப்பனார் 94 வது பிறந்தநாள் முன்னணிட்டு த.மா.கா விவசாய அனி தலைவர் செல்வம் தலைமையில் காமராஜர் அரங்கத்தில் பிறந்தநாள் விழா நடைபெற்றது.திருச்சி மத்திய மாவட்டம் தலைவர் KT தனபால் EX கவுன்சிலர் N ரெங்கராஜன்மாவட்ட துணை தலைவர் கண்ணுச்சாமி சோம்பரசன்பேட்டை மானிக்பாஷா மண்டல துணை தலைவர் வயலூர் -ராஜேந்திரன்,RK நவின் , அழகப்பன், செந்தில், நடராஜன், முருகன், ராமன், திருப்பிதி, சத்தியன்,அருள், மோகன்தாஜ், சேகர் மற்றும் ஊர் பொதுமக்கள் விழாவில்