
தமிழுக்காகவும் தமிழ் இனத்திற்காகவும் தமிழ்நாடு போராடும் தமிழ்நாடு வெல்லும் -அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி
திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் சாலையில் அமைந்துள்ள மன்னர் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் திருவுருவச் சிலைக்கு அவரது 1350 வது சதய விழாவை முன்னிட்டு தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும் மாவட்ட கழக செயலாளரும்மான அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தலைமையில் மாநகரக் கழகச் செயலாளர் மு.மதிவாணன் முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் அதனைத் தொடர்ந்து மத்திய பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள முத்தரையர் மணிமண்டபத்தில் அவரின் திருவுருவ சிலைக்கு மலர்மாலை

தொகுதி மக்களின் தேவைகளுக்காக மாவட்ட கலெக்டர் உடன் உரையாடிய பாராளுமன்ற உறுப்பினர்
இன்று (19.05.2025) மாலை 4 மணியளவில், திருச்சி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் துரை வைகோ திருச்சி தொகுதியில் உள்ள, வாசன் வேலி (Vasan Valley) குடியிருப்போர் நலச் சங்க நிர்வாகிகளோடு, அப்பகுதி பொதுமக்களின் கோரிக்கைகளுக்காக திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் மா. பிரதீப் குமார் இ.ஆ.ப அவர்களை அவரது முகாம் அலுவலகத்தில் சந்தித்து, கோரிக்கைகளின் முக்கியத்துவத்தை விளக்கினார். அதுகுறித்த பல்வேறு வழிகாட்டுதல்களை வழங்கினார். அத்துடன் மற்ற கோரிக்கைகளையும் வழங்கி அதுகுறித்த

ஸ்ரீரங்கம் அரசு பொது மருத்துவமனையை ஆய்வு செய்த பாராளுமன்ற உறுப்பினர் துரை வைகோ
இன்று (19.05.2025) காலை 11 மணியளவில், திருச்சி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் துரை வைகோ திருச்சி ஶ்ரீரங்கம் அரசு பொது மருத்துவமனையை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அந்த மருத்துவமனையில் பணியில் உள்ள மருத்துவர்கள் டாக்டர். அருட்செல்வம், டாக்டர். பொன்மலர், டாக்டர். இளவரசன், டாக்டர். முருகன் ஆகியோர் உடனிருந்தனர். துரை வைகோ அவர்களிடம் பேசும்போது, ஶ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு மக்களிடம் நல்ல பெயர் இருப்பதை சுட்டிக்காட்டி, அதற்கு அவர்களின்
திருச்சியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தை அனுசரித்த தமிழக வெற்றி கழகத்தினர் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்
இலங்கையில் இறுதிக்கட்ட யுத்தத்தில் உயிரிழந்த ஈழத் தமிழர்களின் நினைவாக, வருடம் தோறும் மே 18 ஆம் தேதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழக வெற்றி கழகம் சார்பில் தமிழகம் முழுவதும் அனுசரிப்பு நிகழ்ச்சி நடத்த அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டிருந்தது அதன்படி திருச்சி மாநகர் மாவட்ட சார்பில் திருச்சி வயலூரில் உள்ள விஜய் மஹாலில்முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நினைவு தினம் முன்னெடுக்கப்பட்டது. தமிழக வெற்றி கழகத்தைச் சேர்ந்த
தள்ளாடும் தார் சாலைகள். அவதிக்குள்ளாகும் கிராம மக்கள்
ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறவில்லை என்பது போல திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம் அந்தநல்லூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட முத்தரசநல்லூர் தாமரைக் குளம் பகுதியில் முழுமையான சாலை வசதி இல்லாமல் குண்டும் குழியுமாக மோசமாக பல வருடங்களாக இந்தச் சாலை இப்படித்தான் உள்ளதாக கிராம மக்கள் கூறுகின்றனர். மழைக்காலங்களில் குண்டு குழிகளில் தண்ணீர் தேங்கி நிற்பதால் இரு சக்கர வாகனத்தில் சாலையை கடப்பது மிகவும் சிரமமாக உள்ளதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
கட்சிக் கொடி கம்பங்களை அகற்றுவது யார் ? அரசு துறைகளுக்கிடையே போட்டா போட்டி?
தமிழகம் முழுவதும் பொது இடங்களில் ரோட்டில் வைக்கப்பட்டுள்ள கொடிக்கம்பங்கள் அனைத்தையும் அகற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள எந்த அதிகாரிகளும் இதுவரை பின்பற்றவில்லை. அனைத்து கட்சி கொடிகளும் ரோட்டில் ஓரத்தில் பொதுமக்கள் பயன்படுத்தும் இடங்களில் ஸ்ரீரங்கம் TV Koil பகுதிகளில் இன்னும் இருந்து கொண்டு தான் இருக்கிறது.இது போன்ற ஆபத்தான இடங்களில் பொதுமக்கள் கூடும் இடங்களில் தெருக்களின் மூலைப் பகுதிகளில் கார்னரில் பொது பயன்பாட்டுக்கு

திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் ஒளி மிகுந்த விளக்குகள் அமைக்க கோரிக்கை – திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் துரை வைகோ அறிக்கை
திருச்சி – தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் (பால்பண்ணை முதல் டோல் பிளாசா வரை) போதிய சாலை விளக்குகள் இல்லை. அதனால் அந்த இடம் இருள் சூழ்ந்த இடமாக காட்சி தருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர் மற்றும் விபத்துகள் ஏற்படுகின்றது என்பதை சுட்டிக்காட்டி தேசிய நெடுஞ்சாலைத்துறை (NHAI) மண்டல அலுவலருக்கு நேற்று (13.05.2025) கோரிக்கை கடிதம் எழுதினேன். அது குறித்து இன்று (14.05.2025) தஞ்சையில் உள்ள NHAI திட்ட

பழைய மேரிஸ் ரயில்வே மேம்பாலம் அகற்றப்பட்டதற்குதுரை வைகோ நன்றி அறிக்கை
பழைய மேரிஸ் இரயில்வே மேம்பாலம் அகற்றம். இரயில்வே அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்தேன். திருச்சி மாநகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்படக்கூடிய அளவில் மிகவும் குறுகலான மேம்பாலமாக இருந்த, திருச்சி கோட்டை இரயில் நிலையத்தின் மேரிஸ் மேம்பாலமானது இடிக்கப்பட்டு, போக்குவரத்திற்கு வசதியாக பெரிய பாலம் அமைத்து, பாதையை விரிவு படுத்தும் பணியில், மாநகராட்சி துரிதமாக செயல்பட்டுவந்த நிலையில், இரயில்வே துறையில் மேம்பாலம் இடிக்கும் பணியில் ஒன்றரை ஆண்டுகாலம் தொய்வு ஏற்பட்டிருந்தது. இதனை சுட்டிக்காட்டி,
மலைக்கோட்டை தாயுமானவர் கோயில் நிலத்தில் சர்வே இன்ஸ். ராஜ்குமாருடன் கூட்டுச் சேர்ந்து முறைகேடாக பட்டா மாறுதல் செய்த புகார் தொடர்பான விசாரணையை விரைந்து முடிக்க ஹை கோர்ட் அதிரடி உத்தரவு..
திருச்சி மலைக்கோட்டை அருள்மிகு தாயுமானசுவாமி திருக்கோயிலுக்கு சொந்தமான தாமலவாரூபயம் கிராமம், வார்டு. ஜி, பிளாக்.16, நகரளவை எண் 8-ல் உள்ள நன்செய் 0.9869.4 ச.மீ. பரப்பளவு உள்ள நிலத்தில் பல உட்பிரிவுகளாக பிரிக்கப்பட்டு முறைகேடான வழியில் தனி நபர்களுக்கு பட்டா மாற்றம் செய்யப்பட்டுள்ளதால் அதனை ரத்து செய்து மீண்டும் தாயுமானவர் திருக்கோயில் பெயருக்கு பட்டா மாற்றம் செய்ய திருச்சி வருவாய் கோட்டாட்சியருக்கும் மற்றும் திருச்சி மாவட்ட வருவாய் அலுவலருக்கும் அருள்மிகு
அறநிலைத்துறைக்கு ஷாக் கொடுத்த மின்சார வாரியம்
2025ல் தமிழ்நாட்டில் வீட்டிற்கு மின்சாரம் வந்ததை கேக் வெட்டி கொண்டாடுகின்றனர். நம்ப முடிகிறதா உங்களால் ஆம், திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம் திருப்பராய்த்துறையில் மின்சாரம் இல்லாமல் கடந்த ஆறு வருடமாக மூன்று பெண் குழந்தைகளுடன் அல்லாடி வந்தார் சிவசங்கரி. இவர் தாத்தா திருப்பராய்த்துறை திருக்கோயிலில் பணியாளர், கோயில் வழங்கிய இடத்தில் கூரை வீட்டில், குடியிருந்து வந்தார். தாத்தா இறந்த பின்னர் சிவசங்கரி தனது பாட்டியுடன் கூரை வீட்டில் ஒத்தை மின்சார