
இன்று (08.08.2025) மதியம், மாண்புமிகு ஒன்றிய இரயில்வே துறை அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் அவர்களை, அவரது அலுவலகத்தில் சந்தித்து,
எனது திருச்சி நாடாளுமன்ற தொகுதி மற்றும் திருச்சி மாநகரின் மிகமுக்கிய 15 ஆண்டுகால கோரிக்கையான G-Corner சந்திப்பில் உயர்மட்ட சுழல் சாலையை கட்டுவதற்கு 32,415 சதுர மீட்டர் (8.01 ஏக்கர்) இரயில்வே நிலத்தை பயன்படுத்த No Objection Certificate (NOC) ஐ விரைவாக வழங்குமாறு கோரிக்கை கடிதம் கொடுத்து கேட்டுக்கொண்டேன்.

அதன் விவரம் பின்வருமாறு:
திருச்சியில் NH-38ல் அமைந்துள்ள G-Corner சந்திப்பில் உயரமான சுழல் சாலையை கட்டுவதற்கான தேவையான நடைமுறையை
விரைவுபடுத்துவதற்கான அவசர தேவையை அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்றேன்.
அதில், இந்த திட்டம் குறித்த விரிவான தொழில்நுட்ப அறிமுகம் கடந்த 14.07.2025 அன்று திருச்சி இரயில்வே கோட்ட மேலாளர் (DRM) அலுவலகத்தில் நடைபெற்றதையும், அதில் இரயில்வே, தேசிய நெடுஞ்சாலைத்துறை (NHAI) ஆகியவற்றிலிருந்து முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டதையும் சுட்டிக்காட்டி,

அக்கூட்டத்தில், G-Corner பகுதியில் உயர்மட்ட சுழல் சாலையை அமைப்பதே, இந்த முக்கிய இடத்தில் பாதுகாப்பான இயக்கத்தை உறுதி செய்வதற்கு பயனுள்ள தீர்வாக இருக்கும் என்று அனைவரும் ஒருமனதாக உடன்பட்டனர்.
இது பொன்மலை இரயில்வே தொழில்சாலையை பயன்படுத்தும் இரயில்வே பணியாளர்கள் மற்றும் குடியிருப்பு வாசிகளுக்கு பெரிதும் பயன் தரும்.
அக்கூட்டத்தில்
பங்கேற்ற NHAI அதிகாரிகள், இரயில்வே துறையிடம் No Objection Certificate (NOC) கோரப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். மேலும், தென்னக இரயில்வேயின் பிரிவு பொறியாளர் திட்டத்தை செயல்படுத்துவதற்கு துல்லியமான நில விவரங்களை கோரினார். பின்னர், NHAI துறையின் ஆலோசகர் இந்த திட்டத்திற்கு மொத்த நிலத் தேவை 32,415 சதுர மீட்டர் (3.24 ஹெக்டேயர் அல்லது 8.01 ஏக்கர்) என்று சமர்ப்பித்துள்ளதாக தெரிவித்துள்ளார், இது NH-38இன் இருபக்கங்களிலும் மற்றும் இரயில்வே பணிமனையை நோக்கிய அணுகுபடியை (ramp) உள்ளடக்கியது ஆகும்.
இந்த உள்கட்டமைப்பு முதன்மையாக இரயில்வே சமூகத்தின் பயன் மற்றும் பாதுகாப்பிற்காக உள்ளதால், NHAI க்கு தேவையான NOC ஐ உடனடியாக வழங்குவதற்கு உரிய ரயில்வே அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டுமாய் அமைச்சரைக் கேட்டுக்கொண்டேன்.
இதனால், தேவையான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள முடியும் என்றும்,
அமைச்சரின் உதவி இந்த முன்னேற்றத்தை எளிதாக்கி, திருச்சியின் வளர்ச்சிக்கும், பொதுமக்களுக்கும் அதிலும் குறிப்பாக இரயில்வே பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கும் மிகவும் பயனளிக்கும் என்று எடுத்துரைத்தேன்.
அமைச்சர், ஆவணம் செய்வதாக உறுதியளித்தார்.
அன்புடன்
துரை வைகோ
நாடாளுமன்ற உறுப்பினர் (திருச்சி)
முதன்மை செயலாளர்
மறுமலர்ச்சி திமுக
08.08.2025
புது டெல்லி