NTT TAMIL

Current Date and Time
Loading...

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக பிரதான சாலையை தனிநபர் பெயருக்கு பட்டா வழங்க முடிவு செய்துள்ள மாவட்ட நிர்வாகம்…

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து சங்கம் ஓட்டல் வரையிலான சாலையின் பெரும் பகுதியை ஆக்கிரமிப்பு செய்து வணிகப் பயன்பாட்டில் உள்ள கடைகள் அமைத்து வியாபாரம் செய்து வருகின்றனர்.தமிழக அரசு வெளியிட்டுள்ள புதிய சுற்றறிக்கைபடி *வணிக பயன்பாட்டில் உள்ள இடத்திற்கு பட்டா வழங்க இயலாது என தெளிவாக தெரிவித்து இருந்த போதிலும்* திருச்சி மேற்கு வட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் முறையாக நேரடி ஆய்வு செய்யாமல் அவசரகதியில் மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலையில் உள்ள ஆக்கிரமிப்பாளர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க பரிந்துரை செய்து கோப்புகள் தயார் செய்துள்ளனர். திருச்சி மாநகராட்சிக்கு சொந்தமான பிரதான சாலையில் வணிகப் பயன்பாட்டில் உள்ள ஆக்கிரமிப்பாளர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Posts

POST MY ADD