திருச்சியில் இருந்து வெளியூருக்கு செல்லும் மக்கள் தங்களது இருசக்கர வாகனத்தை மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள வாகனம் நிறுத்தத்தில் நிறுத்திவிட்டு வெளியூர் சென்று வருகின்றனர்.
இவ்வாகன நிறுத்தத்தில் ஒவ்வொரு இருசக்கர வாகனத்திற்கும் திருச்சி மாநகராட்சி நிர்ணயம் செய்த ரூபாய் 15 வசூல் செய்யாமல் அதற்கு மாறாக ரூபாய் 25 வசூல் செய்து வருகின்றனர்.
இது தொடர்பாக, திருச்சி மாநகராட்சி நிர்வாகத்திற்கு வாகன ஓட்டிகள் பலமுறை புகார் தெரிவித்தாலும் ஒப்பந்ததாரர் ஆளுங்கட்சியை சேர்ந்த முக்கிய நபர் என்பதால் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் மாநகராட்சி அதிகாரிகள் கண்டு காணாமல் இருந்து வருகின்றனர்.
திருச்சி மாநகராட்சி விதியை மீறி கூடுதலாக கட்டணம் வசூல் செய்த ஒப்பந்ததாரர் D.ராஜாவின் குத்தகை உரிமத்தை ரத்து செய்ய கோரிக்கை வைத்துள்ளனர்.