
நேற்று மாலை திருப்பூர் பல்லடம் மெட்ரோ கிளம்பில் அறம் அறக்கட்டளை சார்பில் ஏகாதசி சொற்பொழிவு நடைபெற்றது. கூட்டத்தில் “இந்தியாவில் தூய்மை பணியாளர்களின் இன்றைய நிலை” என்ற தலைப்பில் முன்னாள் தேசிய துப்புரவு பணியாளர்கள் ஆணைய தலைவரும், பாரதிய ஜனதா கட்சியின் துணைத் தலைவருமான மா. வெங்கடேசன் சிறப்புரையாற்றினார்.

ஜாதியப் படுகொலைகளில் உயிரிழந்தவர்களுக்காக ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டுக் கூட்டம் தொடங்கியது.
நிகழ்ச்சியில் ஏராளமான தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள் பலரும் பங்கேற்றனர்.
