New Trichy Times

Current Date and Time
Loading...

திருச்சி- ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோயிலை (UNESCO World Heritage Site) உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்திடுக!

ஒன்றிய நிதி அமைச்சருடன் சந்திப்பு!

திருச்சி தொகுதியில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோயிலை (UNESCO – World Heritage Site) யுனெஸ்கோ உலக பாரம்பரிய தலமாக அறிவிக்க வேண்டும் என்ற நீண்ட கால கோரிக்கை நிலுவையில் இருந்து வருகிறது.

இன்று (21.08.25) மாலை ஒன்றிய நிதி அமைச்சர் மாண்புமிகு திருமதி நிர்மலா சீதாராமன் அவர்களை அவரது நாடாளுமன்ற அலுவலகத்தில் ஸ்ரீரங்கம் கோவிலை உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தேன்.

108 திவ்ய தேசங்களில் முதன்மையானதாகவும், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஆன்மீகத் திருத்தலமாகவும், கட்டிடக்கலையில் அற்புதங்களை உள்ளடக்கிய பிரம்மாண்டமான கோயிலாகவும் திகழ்வதை எடுத்துரைத்தேன்.

மேலும் யுனெஸ்கோ அமைப்பு அறிவித்துள்ள 10 தகுதிகளில் 2 தகுதியை பூர்த்தி செய்தாலேயே இந்த உலக பாரம்பரிய சின்னம் தகுதி கிடைக்கும் சூழ்நிலையில், ஶ்ரீரங்கம் திருத்தலமானது இவற்றுள் நான்கு தகுதிகளை பூர்த்தி செய்கிறது என்பதையும் மாண்புமிகு ஒன்றிய நிதி அமைச்சரிடம் எடுத்துரைத்தேன்.

கோரிக்கையை தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக ஒன்றிய நிதி அமைச்சர் அவர்கள் நம்பிக்கை அளித்தார்.

மேலும் இக்கோரிக்கை தொடர்பாக மாண்புமிகு ஒன்றிய கலாச்சார துறை அமைச்சர் திரு. கஜேந்திர சிங் செகாவத் அவர்களை அவரது நாடாளுமன்ற அலுவலகத்தில் ஆகஸ்ட் 12ஆம் தேதி சந்தித்தேன் என்பது குறிப்பிடத்தக்கது.

அன்புடன்
துரை வைகோ
நாடாளுமன்ற உறுப்பினர் (திருச்சி)
முதன்மைச் செயலாளர்
மறுமலர்ச்சி திமுக
21.08.2025
புதுடெல்லி

DuraiVaiko #Vaiko #MDMK #trichymp

1 Comment

  • I loved as much as youll receive carried out right here The sketch is tasteful your authored material stylish nonetheless you command get bought an nervousness over that you wish be delivering the following unwell unquestionably come more formerly again since exactly the same nearly a lot often inside case you shield this hike

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

POST MY ADD