நடிகர் விமல் நடிப்பில் எதில் இயக்கிய தேசிங்கு ராஜா திரைப்படம் நகைச்சுவை படங்களில் மிகச்சிறந்த படமாக கருதப்படும் ஒன்று அந்த திரைப்படத்தின் நகைச்சுவை காட்சிகள் இன்றளவும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பெற்ற காட்சிகள் ஆகும் குறிப்பாக சிங்கம் புலி பாயசம் எங்கேடா என்கின்ற காமெடி காட்சியும் சூரியின் கவுண்டர் டயலாக் மிகவும் பிரபலம்.

அந்த வகையில் பலராலும் பாராட்டைப் பெற்ற தேசிங்கு ராஜா திரைப்படம் இப்பொழுது இரண்டாம் பாகம் தயாராக உள்ளதாக அதன் இயக்குனர் தெரிவிக்கின்றார்.

. முதல் பாகத்தை போலவே காமெடி கலந்த கதைக்களத்தில் இப்படம் உருவாகி வருகிறது. வித்யாசாகர் இசையமைக்கும் இந்தப் படத்தில் விமலுடன் ரவி மரியா, ஹர்ஷிதா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். கோடை விடுமுறையை முன்னிட்டு படம் திரையரங்குகளில் வெளியாகும் என விமல் தெரிவித்தார்.