NTT TAMIL

Current Date and Time
Loading...

திருச்சி திருவெறும்பூர்

திருச்சிராப்பள்ளி மாவட்டம் திருவெறும்பூர் அருள்மிகு எறும்பீஸ்வரர் திருக்கோவில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த ஒரு சிவஸ்தலம் இத்திருக்கோவில் எறும்புகளாக தேவர்கள் வந்து சிவனை வழிபட்டதாக ஐதீகம் கிட்டத்தட்ட 26 ஆண்டுகளுக்குப் பிறகு கடும் போராட்டங்களை தொடர்ந்து இத்திருக்கோவிலுக்கு நேற்று குடமுழுக்கு விழா நடைபெற்றது .

மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களின் சட்டமன்ற தொகுதியில் உள்ள இத்திருக்கோவில் சரியான மின்சார வசதியோ பக்தர்களின் தாகம் தணிப்பதற்கான குடிநீர் வசதியோ செய்து தரப்படாமல் இறைவனை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு கடும் மன உளைச்சலை ஏற்படுத்தி வருகின்றது கோவிலின் நிர்வாகம்.

எறும்பீஸ்வரர் ஆலயத்தில் மூலவர் சன்னதியில் கடந்த இரண்டு நாட்களாக மின்சாரம் இல்லாமல் பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.

ஆதி காலத்தில் மின்சாரம் கண்டுபிடிப்பதற்கும் முன்பாக இறைவனை விளக்கு ஒளியில் பக்தர்கள் தரிசித்ததாக கூறப்படுகிறது கிட்டத்தட்ட இன்றைக்கு எறும்பீஸ்வரர் திருக்கோவிலில் பக்தர்கள் அப்படிப்பட்ட ஒரு நிலையில் இறைவனை தரிசித்து வருகிறார்கள்.

ஆலயத்தில் உள்ள அனைத்து பகுதி வெளிப்பகுதிகளிலும் சீரியல் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு உள்ளே மூலவர் மற்றும் சுற்று பிரகாரத்தில் இரண்டு நாட்களாக மின்சாரம் இல்லாமல் பொதுமக்கள் தரிசனம் செய்து கொண்டு வருகின்றனர். மேலும் இந்த மலைக்கு செல்லும் குடிநீர் குழாய் இணைப்பு வழங்காமல் உள்ளதால் கடும் வெயிலிலும் பக்தர்கள் குடிக்கக்கூட குடிநீர் இல்லாமல் அவதிக்குள்ளாகின்றனர்.

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களும் மாண்புமிகு இந்து அறநிலையத்துறை அமைச்சர் அவர்களும் மாண்புமிகு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அவர்களும் உடனடியாக உரிய நடவடிக்கை எடுத்து மலைக்கோவிலின் இறைவனை தரிசிக்க வரும் பக்தர்களின் குறைகளை உடனடியாக நிவர்த்தி செய்ய வேண்டும் என்பதை பக்தர்கள் மற்றும் அந்த பகுதி பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

Related Posts

POST MY ADD