NTT TAMIL

Current Date and Time
Loading...

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் அலிம்கோ நிறுவனம் இணைந்து நடத்தும் சமூக வலுவூட்டல் முகாம் வாயிலாக மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்கும் விழா

இன்று (29.05.2025) திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் அவர்கள் தலைமையில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மக்கள் குறை தீர்க்கும் கூட்டரங்கத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் மதிமுக முதன்மைச் செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ எம்.பி., அவர்கள் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்களை வழங்கினார்கள்.

துணைப் பொதுச்செயலாளர் மருத்துவர் ரொஹையா, மாவட்டக் கழகச் செயலாளர்கள் வெல்லமண்டி இரா.சோமு, டி.டி.சி.சேரன், மணவை தமிழ்மாணிக்கம் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகரக் கழக நிர்வாகிகளும், தோழர்களும், பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டனர்.

Related Posts

POST MY ADD