
திருச்சிராப்பள்ளி மாவட்டம் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட எளமனூர் அண்ணா நகர் பகுதியில் மின் மோட்டார் சரியில்லாத காரணத்தினால் குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதாகவும் உடனடியாக பஞ்சாயத்து நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்து சீர் செய்ய வேண்டும் என்று செய்தி வெளியிட்டிருந்தோம்.

இதை கவனத்தில் கொண்ட திருப்பராய்த்துறை பஞ்சாயத்து தலைவர் உடனடியாக துரித நடவடிக்கை எடுத்து பழுதாகி இருந்த மோட்டரை சரி செய்து கிராம மக்களுக்கு குடிநீருக்கான ஏற்பாடுகளை செய்து மின்னல் வேகத்தில் விரைந்து நடவடிக்கை எடுத்த திருபராத்துறை பஞ்சாயத்து தலைவர் மற்றும் நிர்வாகிகள் பணியாளர்கள் அனைவருக்கும் கிராம மக்கள் சார்பாக நியூ திருச்சி டைம்ஸ் தன் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றது.