
கடந்த 05.08.2025 அன்று மாண்புமிகு ஒன்றியத் தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் எல். மாண்டவியா அவர்களிடமும்,
07.08.2025 அன்று தொழிலாளர்களின் மாநில காப்பீட்டுக் கழகத்தின் (Employees’ State Insurance Corporation – ESIC) இயக்குநர் (பொது) திரு. அசோக் குமார் சிங், இ.ஆ.ப., அவர்களிடமும் நேரில் வழங்கிய,
- திருச்சியில் ESIC மண்டலத் துணை அலுவலகம் அமைத்துத்தர வேண்டிய கோரிக்கை மற்றும்
- திருச்சியில் உள்ள ESIC மருத்துவமனையை தரம் உயர்த்தி 100 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையாக மாற்றித்தர வேண்டிய கோரிக்கையுடன்
இன்று (19.08.2025) காலை மாண்புமிகு ஒன்றியத் தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்புத் துறை இணை அமைச்சர் திருமதி சுஸ்ரீ ஷோபா கரந்த்லஜே அவர்களை அவரது அலுவலகத்தில் சந்தித்து,
மேற்கண்ட கோரிக்கைக்கான கடிதத்தை வழங்கி, அதன் அவசியம் குறித்து எடுத்துரைத்மார் துரை வைகோMP.
அப்போது இதே கோரிக்கையை அமைச்சரிடமும், ESIC இயக்குநரிடமும் வழங்கியுள்ளதையும், இதன் அவசியம் கருதி தங்களை சந்தித்து கோரிக்கை வைப்பதாகவும் தெரிவித்தார்.
இது குறித்து அமைச்சரிடம் ஆலோசித்து விரைந்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக இணை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார். .
அன்புடன்,
துரை வைகோ
நாடாளுமன்ற உறுப்பினர் (திருச்சி)
முதன்மைச் செயலாளர்,
மறுமலர்ச்சி திமுக
19.08.2025
புதுடெல்லி
