NTT TAMIL

Current Date and Time
Loading...

இன்று( 04.02.2026) மாண்புமிகு ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அவர்களை புது தில்லியிலுள்ள அவரது அலுவலகத்தில் துரை வைகோ MP சந்தித்தார்.

திருச்சி நாடாளுமன்றத் தொகுதியைச் சார்ந்த முக்கியமான கோரிக்கைகளை அவரிடம் விரிவாக முன்வைத்தார்.

முதலாவதாக, ஜி கார்னர் போக்குவரத்து சந்திப்பில் உள்ள போக்குவரத்து ஒழுங்கின்மைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டிய அவசியத்தையும், அதற்கு துரை வைகோ மேற்கொண்டுள்ள தொடர் முயற்சியின் நகர்வுகள் குறித்து எடுத்துரைத்தார், ஜி கார்னர் பகுதியில் உள்ள போக்குவரத்து ஒழுங்கின்மைக்கு தீர்வாக உயர்மட்ட சுழல் பாலம் ( Elevated rotary) அமைப்பது மற்றும் அது தொடர்பாக 30.01.2026 அன்று தனது ஏற்பாட்டில் சென்னையில் நடந்த ஒருங்கிணைப்புக் கூட்டம் குறித்தும் விளக்கினார். அந்தக் கூட்டத்தில் தெற்கு ரயில்வே பொதுமேலாளர், திருச்சி கோட்ட DRM மற்றும் NHAI அதிகாரிகள் பங்கேற்றிருந்ததையும், அதன் மூலம் எட்டப்பட்ட முடிவுகளையும் எடுத்துரைத்தார துரை வைகோ.

இதற்கு அமைச்சர் அவர்கள் மிகுந்த அக்கறையுடன் பதிலளித்து, தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என உறுதியளித்தார்.

மேலும், அமைச்சர் அவர்கள் கூடுதலாக மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையையும் நிர்வாகித்து வருவதால் அவர்களிடம், திருச்சி–மணப்பாறை SIPCOT பகுதியை எலக்ட்ரானிக்ஸ் மற்றும் செமிகண்டக்டர் தொழில் மையமாக உருவாக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார் துரை வைகோ. 2026 ஒன்றிய பட்ஜெட்டில் India Semiconductor Mission Phase 2.0 திட்டத்தின் கீழ் ₹40,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதையும் சுட்டிக்காட்டி, இந்த திட்டத்தில் தனது திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட மணப்பாறை சிப்காட்டில் முதலீடுகளை கொண்டுவர முக்கியத்துவம் கொடுக்கக் கோரிக்கை விடுத்தார் துரை வைகோ.

அதற்கடுத்து, ரயில் சேவை குறித்த கோரிக்கையில், கடந்த 21.07.2025 அன்று அளித்த மனுவையும், 10.12.2026 அன்று அனுப்பிய நினைவூட்டலையும் குறிப்பிட்டு, திருப்பதி – திருச்சி இடையே பகல் நேர Intercity Express ரயிலை அறிமுகப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தினார். இந்த சேவைக்காக அமைச்சரால் முன்னதாக எனக்கு வழங்கப்பட்ட உறுதி, திருச்சி மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பையும் நம்பிக்கையையும் உருவாக்கியுள்ளதையும் தெரிவித்தார் துரை வைகோ.

அதற்கடுத்து, ஏற்கெனவே முன்மொழியப்பட்டுள்ள ராமேஸ்வரம்–சென்னை வந்தே பாரத் ரயிலை விரைவில் இயக்க வேண்டியும், இந்த சேவையில் ஶ்ரீரங்கம் ரயில் நிலையத்தில் நிறுத்தம் வழங்கக் கோரிக்கை விடுத்தார். ஏற்கனவே சென்னையிலிருந்து இயக்கப்படும் Tejas Express மற்றும் திருநெல்வேலி – சென்னை, நாகர்கோவில் – சென்னை வழித்தடங்களில் இயக்கப்படும் Vande Bharat Express ரயில்கள் தற்போது ஶ்ரீரங்கம் ரயில் நிலையத்தில் நிறுத்தமின்றி செல்லும் நிலை குறித்து எடுத்துரைத்தார் துரை வைகோ MP. நாட்டின் முக்கியமான திருத்தலங்களில் ஒன்றான ஸ்ரீரங்கத்திற்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவதால், இங்கு இந்த பிரீமியம் ரயில்களுக்கு நிறுத்தம் வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார் துரை வைகோ.

மேலும், திருவெறும்பூர் ரயில் நிலையத்தில் திருச்சி – தாம்பரம் சிறப்பு ரயில் மற்றும் சோழன் விரைவு ரயில் ஆகியவற்றிற்கு நிறுத்தம் வழங்க வேண்டும் என்ற தனது கோரிக்கையை ஏற்று நடவடிக்கை மேற்கொண்டதற்கும், அதேபோல் எனது கோரிக்கையை ஏற்று திருச்சி – தாம்பரம் இடையே இயக்கப்பட்டு வரும் ரயில் சேவையை நிரந்தர சேவையாக அறிவித்ததற்கும் மாண்புமிகு அமைச்சர் அவர்களுக்கு எனது மனப்பூர்வமான நன்றியினை தெரிவித்து கொண்டார் துரை வைகோ.

தனது தொகுதி மக்களின் தேவைகள், பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி நோக்கங்களை கருத்தில் கொண்டு முன்வைக்கப்பட்ட இந்த அனைத்து கோரிக்கைகளையும் அமைச்சர் அவர்கள் மிகக் கவனமாகக் கேட்டுக் கொண்டு, சாதகமான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

About Author
NTT தமிழ்

New Trichy Times இது சாமானியனின் உரிமைக்குரல்

View All Articles
Check latest article from this author !
வக்பு வாரிய சட்ட திருத்தத்திற்கு எதிராக திருச்சி எஸ் டி பி ஐ கட்சியினர் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
நடுத்தெருவில் போராடும் பேராசிரியர்கள் – அண்ணா பல்கலைக்கழக மாணவர்களின் படிப்பு கேள்விக்குறி -தமிழக முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க பேராசிரியர்கள் கோரிக்கை
1% செஸ் வரியை நீக்கி மக்காச்சோள விவசாயத்தைப் பாதுகாத்ததைப் போலவே, மக்காச்சோளத்திற்கு குறைந்தபட்ச உத்தரவாத விலை நிர்ணயம் செய்து, அதற்கு ஈடாக மானியம் வழங்கி விவசாயிகளைப் பாதுகாக்க வேண்டும் என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் துரை வைகோ எம்.பி வேண்டுகோள்.
தொடரும் பாலியல் தொல்லையா? அதிகாரிகள் ஆய்வு.ஆசிரியரே புகார் கொடுக்க உடனடி நடவடிக்கையில் இறங்கிய திருச்சி மாவட்ட நிர்வாகத்தினருக்கு குவியும் பாராட்டுக்கள்.

Related Posts

POST MY ADD