NTT TAMIL

Current Date and Time
Loading...


.

இந்தச் சந்திப்பின்போது, 2026 ஒன்றிய பட்ஜெட்டில் நாட்டில் ஐந்து இடங்களில் பல்கலைக்கழக நகரங்கள் (University Township) அமைக்கபடும் என்கிற திட்டத்தில் நாட்டின் மிகச் சிறந்த பல கல்வி நிலையங்களை தன்னகத்தே கொண்டுள்ள, தமிழகத்தின் கல்வி மையமாக (Educational Hub) விளங்கும் மற்றும் மாண்புமிகு நிதி அமைச்சர் உட்பட பல தேச மற்றும் சர்வதேச ஆளுமைகளை உருவாக்கிய திருச்சி மாநகரத்தில் இந்த பல்கலைக்கழக நகரம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார் துரை வைகோ எம்பி.

மேலும், திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட மணப்பாறை SIPCOT பகுதியை எலக்ட்ரானிக்ஸ் மற்றும் செமிகண்டக்டர் தொழில் மையமாக உருவாக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார் துரை வைகோ. 2026 ஒன்றிய பட்ஜெட்டில் India Semiconductor Mission Phase 2.0 திட்டத்தின் கீழ் ₹40,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதையும் சுட்டிக்காட்டி, இந்த திட்டத்தில் திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட மணப்பாறை சிப்காட்டில் முதலீடுகளை கொண்டுவர முக்கியத்துவம் கொடுக்கக் கோரிக்கை விடுத்தார். இது குறித்து மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பதுறையை கூடுதலாக கவனித்து வரும் அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை சந்தித்து கோரிக்கை வைத்ததையும் தெரிவித்து கொண்டார் துரை வைகோ எம்.பி.

மேலும், சென்ற கூட்டத் தொடரின்போது தனது தொகுதி உட்பட நாட்டில் உள்ள பொதுத்துறை நிறுவனங்களுக்கு தேவைபடும் அரிய மண் தாதுக்கள் இறக்குமதி செய்து கொடுப்பதில் இருந்த தடைகள் குறித்து தனது கவனத்திற்கு வந்ததையடுத்து, நிதி மற்றும் வர்த்தக அமைச்சகங்களின் உயர் செயலதிகாரிகளின் கவனத்திற்கு எடுத்து சென்று. உடனடி கொள்கை மாற்றங்கள் செய்து கொடுத்த அதிகாரிகளுக்கும் அமைச்சரிடம் நன்றி தெரிவித்து கொண்டார் துரை வைகோ எம்.பி.

திருச்சி மாவட்டத்தின் கல்வி வளர்ச்சி, தொழில் முன்னேற்றம் மற்றும் இளைஞர்களின் வேலைவாய்ப்பு உருவாக்கத்தை கருத்தில் கொண்டு முன்வைக்கப்பட்ட இந்த கோரிக்கைகளை கவனமாக கேட்டுக் கொண்ட மாண்புமிகு நிதியமைச்சர் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டார் துரை வைகோ எம்.பி.

About Author
NTT தமிழ்

New Trichy Times இது சாமானியனின் உரிமைக்குரல்

View All Articles
Check latest article from this author !
வக்பு வாரிய சட்ட திருத்தத்திற்கு எதிராக திருச்சி எஸ் டி பி ஐ கட்சியினர் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
நடுத்தெருவில் போராடும் பேராசிரியர்கள் – அண்ணா பல்கலைக்கழக மாணவர்களின் படிப்பு கேள்விக்குறி -தமிழக முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க பேராசிரியர்கள் கோரிக்கை
1% செஸ் வரியை நீக்கி மக்காச்சோள விவசாயத்தைப் பாதுகாத்ததைப் போலவே, மக்காச்சோளத்திற்கு குறைந்தபட்ச உத்தரவாத விலை நிர்ணயம் செய்து, அதற்கு ஈடாக மானியம் வழங்கி விவசாயிகளைப் பாதுகாக்க வேண்டும் என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் துரை வைகோ எம்.பி வேண்டுகோள்.
தொடரும் பாலியல் தொல்லையா? அதிகாரிகள் ஆய்வு.ஆசிரியரே புகார் கொடுக்க உடனடி நடவடிக்கையில் இறங்கிய திருச்சி மாவட்ட நிர்வாகத்தினருக்கு குவியும் பாராட்டுக்கள்.

Related Posts

POST MY ADD