NTT TAMIL

Current Date and Time
Loading...

துபாய் தொழில்துறையினர் மாநாட்டில் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்த துரை வைகோ mp அந்த நிகழ்வை முடித்துக் கொண்டு நேற்று (15.06.2025) காலை 10:30 மணியளவில் அமீரக மறுமலர்ச்சி திமுக தோழர்கள் மற்றும் இயக்கத் தலைவர் வைகோ அவர்களின் அனுதாபிகளை சந்தித்து கலந்துரையாடினார்.

அப்போது, வைகோ அவர்களின் உடல் நலம், கட்சியின் செயல்பாடுகள் மற்றும் எதிர்காலம், துரை வைகோ அவர்களின் நாடாளுமன்ற பேச்சுகள், தொகுதியில் ஆற்றும் பணிகள் குறித்து உரையாடினர், தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

அப்போது திருச்சி நாடாளுமன்ற உறுப்பினராக துரை வைகோ அவர்களின் ஓராண்டுப் பணியைப் பாராட்டி கேக் வெட்டும் நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்திருந்தனர்.

அத்துடன் தமிழ்நாடு அரசியல் சூழல், கட்சியின் நிலைப்பாடு குறித்தும் கேள்விகள் எழுப்பினர். அதற்குண்டான பதிலை வழங்கினார் துரை வைகோ..

அவர்களது குடும்பம், தொழில், கட்சிப் பணிகள் குறித்தும் கலந்துரையாடினார் துரை வைகோ. இது மிகவும் மனதிற்கு நெருக்கமான நிகழ்வாக, மகிழ்ச்சியான சந்திப்பாக அமைந்தது என்று மகிழ்ந்த துரை வைகோ . இச்சந்திப்பில் கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்துகொண்டு தாயகம் திரும்ப விமான நிலையம் புறப்பட்டார்.

DuraiVaiko #Vaiko #MDMK #trichymp #SoniaGanthi #RahulGanthi #PriyankaGandhi #Congress #INDIA #INDIAllaince

Related Posts

POST MY ADD