NTT TAMIL

Current Date and Time
Loading...

திருச்சி பன்னாட்டு விமான நிலைய புதிய இயக்குநரைச் சந்தித்து வாழ்த்து தெரிவித்தேன்.

எனது திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் அமைந்துள்ள திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தின் புதிய இயக்குநராகப் பொறுப்பேற்றுள்ள திரு. S.S.ராஜூ அவர்களை, இன்று (28.11.2025) மாலை 3 மணியளவில் விமான நிலைய சந்திப்பறையில் நேரில் சந்தித்தேன். அப்போது, அவர் எனக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். நான் அவரது பணி சிறக்க வாழ்த்துகளைத் தெரிவித்தேன்.

இச்சந்திப்பில், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினராக நான் பொறுப்பேற்ற நாளிலிருந்தே, திருச்சி விமான நிலைய ரன்வே விரிவாக்கப் பணிகள் தாமதமின்றி நிறைவுபெற நான் தொடர்ந்து முயற்சிகள் மேற்கொண்டு வருவதை எடுத்துரைத்தேன்.

கடந்த 10.10.2025 அன்று நடைபெற்ற திருச்சி பன்னாட்டு விமான நிலைய ஆலோசனைக் குழுக் கூட்டத்திலும் ரன்வே விரிவாக்கம் தொடர்பாக நான் வலியுறுத்திய முக்கிய கோரிக்கையை மீண்டும் அவரிடம் சுட்டிக்காட்டினேன்.

ரன்வே விரிவாக்கம் என்பது பெரிய ரக விமானங்களை இயக்கவும், திருச்சியை உலகத் தரம் வாய்ந்த பன்னாட்டு மையமாக உயர்த்தவும் இன்றியமையாதது என்பதை விளக்கினேன்.

இதற்கு நீர்வளத்துறை அனுமதி கிடைக்க ஏற்பட்ட தாமதமே பிரதான தடையாக இருந்தது என்றும், அதனைத் தீர்க்க நான் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து, விமான நிலைய இயக்குநரை தொலைபேசியில் இணைத்து, ஆட்சியரின் வழிகாட்டுதலின்படி அனைத்து ஆவணங்களையும் முடித்து ஒப்புதலுக்காக அனுப்பியுள்ளதையும் தெரிவித்தேன்.

எனது முயற்சியில் நீர்வளத்துறையிடமிருந்து ஒப்புதல் கிடைக்கப்பெற்றுள்ளோம் என்று மகிழ்வோடு தெரிவித்தார்.

திருச்சி பன்னாட்டு விமான நிலையம் தமிழ்நாட்டிலேயே வேகமாக வளர்ந்து வரும் விமான நிலையங்களில் ஒன்று என்பதையும், தென் இந்தியாவை வளைகுடா நாடுகளுடனும் தென்கிழக்காசிய நாடுகளுடனும் இணைக்கும் முக்கிய மையமாக உருவாகும் திறன் கொண்டது திருச்சி விமான நிலையம் என்பதையும் சுட்டிக்காட்டி, அதற்கு ரன்வே விரிவாக்கம் முதன்மையானது என்பதை மீண்டும் வலியுறுத்தினேன்.

ரன்வே விரிவாக்கப் பணியில் எந்த தேவை ஏற்பட்டாலும் என்னை தொடர்புகொண்டு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும், அதற்காக, ஒன்றிய விமானப் போக்குவரத்து அமைச்சர் மற்றும் அதிகாரிகளை எந்நேரமும் சந்தித்து முறையிடவும் தயாராக இருப்பதாகவும், திருச்சி மக்களின் பிரதிநிதியாக விமான நிலைய வளர்ச்சித் திட்டங்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவேன் என்றும் உறுதியளித்தேன்.

மேலும் இந்த கலந்துரையாடலில், ஏற்கனவே உயரம் குறைவாக கட்டப்பட்ட ATC டவரின் உயரத்தை அதிகரித்துக்கொள்ள ஒப்புதல் கிடைத்துவிட்ட நிலையில், அதற்குரிய கட்டுமாணப்பணி நடந்துவருவதாகவும், மேற்கொண்டு எந்த தாமதமும் இன்றி அப்பணி விரைவில் முடிவடையும் என்று தெரிவித்தார்.

நமது திருச்சி விமான நிலையத்தில், Air Courier Cargo Service தொடங்க Airport Authority of India அவர்கள் Ready to operate ஒப்புதல் கொடுக்க வேண்டும். இதற்காக நான் விமான போக்குவரத்து அமைச்சரை நேரில் சந்தித்து இது குறித்து பேசியதை சுட்டிக்காட்டினேன். விரைவில் இதற்கு ஒரு நல்ல தீர்வு கிடைக்கும் என்று விமான நிலைய இயக்குனர் என்னிடம் தெரிவித்தார்.

CISF – Central Industrial Security Force shortage பற்றி பேசினோம். புதிய டெர்மினல் அமைந்த பிறகு, அதுக்கு தேவைப்படும் CISF பணியாளர்களை அதிகப்படுத்தி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை AAI, ஒன்றிய அமைச்சகத்திற்கு அனுப்பி உள்ளதாக தெரிவித்தார். இதற்காகவும் நான் ஒன்றிய உள்துறை அமைச்சரை இந்த கூட்டத்திடரிலேயே சந்தித்து கேட்டுக்கொள்வேன் என்று கூறினேன்.

மேலும், Digi-Yatra சேவை திருச்சில் நடைமுறைபடுத்த தேவைப்படும் அனைத்து முயற்சியையும் நான் மேற்கொள்வேன் என்றும் தெரிவித்துக்கொண்டேன்.

இறுதியாக, திருச்சி விமான நிலையத்திற்கு ஒப்புதல் பெறப்பட்ட international to international transit வசதியை முழுமையா நடைமுறைக்கு கொண்டுவரவும் நான் முயற்சி மேற்கொள்வேன் என்று தெரிவித்துக்கொண்டேன்.

மேலும், ஊடக நண்பர்களின் நீண்ட நாள் கோரிக்கையான விஐபி நுழைவாயிலில் மைக் வைப்பதற்கான மேஜை ஏற்பாட்டை விமான நிலைய நிர்வாகம் செய்து தந்ததைப்போல, சாதாரண நுழைவாயில் மற்றும் பயணிகள் வெளியேறும் இடத்திலும் இரு மேஜைகளை அமைத்துத் தருமாறு ஊடகவியலாளர்கள் கேட்டுக்கொண்டதை இயக்குநரிடம் தெரிவித்து, அதனை உடனடியாக நிறைவேற்றித் தரும்படி கடிதம் கொடுத்து கேட்டுக்கொண்டேன்.

புதிய இயக்குநரின் அனுபவமும் ஆற்றலும் திருச்சி விமான நிலையத்தின் மேம்பாட்டுக்கும் வளர்ச்சிக்கும் பெரிதும் பயன்படும் என்ற நம்பிக்கையுடன் சந்திப்பை நிறைவு செய்து புறப்பட்டேன்.

அன்புடன்
துரை வைகோ
நாடாளுமன்ற உறுப்பினர் (திருச்சி)
முதன்மைச் செயலாளர்,
மறுமலர்ச்சி திமுக
29.11.2025

Related Posts

POST MY ADD