திருச்சி கோட்டை இரயில் நிலையத்தின் அருகில் உள்ள பழைய மேரிஸ் மேம்பாலத்தை இடிக்கும் பணி கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தொய்வாக இருந்துவருவதை சுட்டிக்காட்டி,

கடந்த 23.04.2025 அன்று தென்னக இயில்வே பொது மேலாளர் தலைமையில், திருச்சியில் நடைபெற்ற தென்னக இரயில்வே திருச்சி கோட்ட வளர்ச்சித் திட்டங்கள் குறித்த கலந்தாய்வு கூட்டத்தில் பேசினேன். இதனை வலியுறுத்தி எழுத்துப்பூர்வமாகவும் கோரிக்கை அளித்தேன். அப்போது பதிலளித்து பேசிய தென்னக இரயில்வே பொது மேலாளர் வருகின்ற ஜூன் மாதத்திற்குள் இப்பணிகள் முடிவடையும் என்று உறுதி கூறினார்.

அதனை குறிப்பிட்டு நேற்று திருச்சி கோட்ட மேலாளரை சந்தித்தபோதும் எடுத்துரைத்தேன். மிக விரைவில் இப்பணி முடியும் என்று நேற்று தான் தகவல் தந்தனர். இன்று அந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது இரயில்வே துறை.
அதில், நாளை மறுநாள் 13.05.2025 செவ்வாய்க்கிழமை அன்று மேரிஸ் இரயில்வே மேம்பாலம் இடித்து முடிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பொதுமக்களின் நலன் கருதி எனது கோரிக்கையை ஏற்று விரைந்து அறிவிப்பு வெளியிட்டுள்ள தென்னக இரயில்வே பொது மேலாளருக்கும், திருச்சி கோட்ட இரயில்வே மேலாளருக்கும் மற்றும் அனைத்து இரயில்வே துறை அதிகாரிகளுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

அன்புடன்
துரை வைகோ
நாடாளுமன்ற உறுப்பினர் (திருச்சி)
முதன்மைச் செயலாளர்
மறுமலர்ச்சி திமுக
11.05.2025