NTT TAMIL

Current Date and Time
Loading...

பகுத்தறிவுப் பகலவன் தந்தைப் பெரியார் அவர்களின் 147-ஆவது பிறந்த நாளையொட்டி, திருச்சி – காட்டூரில் உள்ள அய்யாவின் சிலைக்கு மாலை அணிவித்து மலர் வணக்கம் செலுத்தினேன்.

“மதவாதம் மாயட்டும்
சாதியவாதம் தொலையட்டும்
மனிதநேயம் பரவட்டும்” என்றும், அய்யா பெரியாரின் புகழ் ஓங்கிடவும் அனைவருடனும் இணைந்து முழக்கம் எழுப்பினேன்.

இந்த நிகழ்வில் என்னுடன் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் டாக்டர் ரொஹையா, திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளர் வெல்லமண்டி இரா.சோமு, திருச்சி வடக்கு மாவட்டச் செயலாளர் டி.டி.சி.சேரன், திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளர் மணவை தமிழ்மாணிக்கம், புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் எஸ்.கே.கலியமூர்த்தி, அரியலூர் மாவட்டச் செயலாளர் இராமநாதன், மாநில விவசாய அணிச்செயலாளர் வாரணவாசி கி.இராசேந்திரன் மற்றும் கழக முன்னோடிகள் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.

https://www.instagram.com/reel/DOsrVa-kjeY/?igsh=MWE2NzBsbGQ0ZGRqeg==

அன்புடன்

துரை வைகோ
முதன்மைச் செயலாளர்
மறுமலர்ச்சி திமுக
திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர்

திருச்சி
17.09.2025.

Related Posts

POST MY ADD