NTT TAMIL

Current Date and Time
Loading...

தந்தை பெரியாரின் 147 வது பிறந்தநாளில் உறுதிமொழி ஏற்பு!

திருச்சி வருகை தந்த தமிழக முதல்வர் அவர்களை வரவேற்றேன்!

திருச்சி வருகை தந்த தமிழக முதல்வர் அண்ணன் தளபதி அவர்களை இன்று (17.09.25) காலை திருச்சி விமான நிலையத்தில் வரவேற்றேன்.

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்களின் 147வது பிறந்தநாளையொட்டி தமிழக முதல்வர் அவர்கள், தந்தை பெரியார் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்துவிட்டு, சமூக நீதி நாள் உறுதிமொழியான சமத்துவம், சகோதரத்துவம், சமதர்மம், சமூக நீதி, மனிதாபிமானம் ஆகியவற்றை அடித்தளமாகக் கொண்ட சமுதாயம் அமைய வேண்டும் என்ற உறுதி மொழியை தமிழகம் முதல்வர் அவர்கள் ஏற்க, பின் தொடர்ந்து சமூக நீதி நாள் உறுதி மொழியை அனைவரும் எடுத்துக்கொண்டோம்.

நிகழ்ச்சியில் மாண்புமிகு அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.

அன்புடன்
துரை வைகோ
நாடாளுமன்ற உறுப்பினர் (திருச்சி)
முதன்மைச் செயலாளர்
மறுமலர்ச்சி திமுக
15.09.2025

DuraiVaiko #Vaiko #MDMK #trichymp

Related Posts

POST MY ADD