
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவரும் எம்பியுமான ராகுல் காந்தி அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் இலவச மருத்துவ முகாம் திருச்சி மெயின் கார்ட் கேட் அருகே உள்ள தியாகி அருணாச்சலம் மன்றத்தில் இன்று நடைபெற்றது.

இந்த மருத்துவ முகாமிற்கு காங்கிரஸ் கமிட்டி மாவட்ட தலைவரும், கவுன்சிலருமான ரெக்ஸ் தலைமை தாங்கினார். தெற்கு மாவட்ட தலைவர் கோவிந்தராஜ் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவரும், மத்திய, மாநில முன்னாள் அமைச்சரும், திருச்சி பாராளுமன்ற முன்னாள் உறுப்பினருமான திருநாவுக்கரசர் கலந்துகொண்டு இலவச மருத்துவ முகாமை தொடங்கி வைத்து பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து இந்த இலவச மருத்துவ முகாமில் அவரும் பங்கேற்று உடல் பரிசோதனை செய்துக்கொண்டர்.

இந்த மருத்துவ முகாமில் சர்க்கரை அளவு, ரத்த கொதிப்பு, கண் பரிசோதனை, ஈசிஜி மற்றும் பொது மருத்துவம் உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. மேலும் இந்த மருத்துவ பரிசோதனையில் சிகிச்சை மேற்கொண்ட பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் கண் குறைபாடு உடைய வர்களுக்கு கண் கண்ணாடிகள் வழங்கப்பட்டது.

இந்த மருத்துவ முகாமில் திருச்சி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி பொருளாளர் முரளி, கோட்டத் தலைவர் பிரியங்கா பட்டேல், மகளிர் அணி தலைவர் சீலா செலஸ் மற்றும் காங்கிரஸ் மாவட்ட நிர்வாகிகள் தொண்டர்கள் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
