
திருச்சி தில்லை நகர் ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனை மற்றும் தென்னக நுகர்வோர் மற்றும் மக்கள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் மாபெரும் இலவச பொது மருத்துவ முகாம் 12/7/2025 சனிக்கிழமை சூப்பர் பசாரில் உள்ள தென்னக நுகர்வோர் மற்றும் மக்கள் பாதுகாப்பு இயக்கத்தின் அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்த சிறப்பு மருத்துவ முகாமில் குடல் வயிறு தொடர்பான பிரச்சனைகள் சிறுநீரக பிரச்சனைகள் இருதய நோய் கோளாறுகள் சர்க்கரை நோய்க்கான மருத்துவம் மகளிருக்கான மருத்துவம் மற்றும் குழந்தைகள் நல மருத்துவம் ஆகியவற்றின் கீழ் பொதுமக்களுக்கு இலவசமாக மருத்துவ பரிசோதனைகளும் ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.

இந்த மருத்துவ முகாமில் 100க்கும் அதிகமான பயனாளர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
இந்த மருத்துவ முகாமிற்கான ஏற்பாடுகளை திருச்சி தலைநகர் ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் மேலாளர் ஜான் மற்றும் தென்னக நுகர்வோர் மற்றும் மக்கள் பாதுகாப்பு இயக்கத்தின் நிறுவன தலைவர் மனித விடியல் மோகன் ஆகியோர் சிறப்பு ஏற்பாடு செய்திருந்தனர்.

முகாமில் கலந்து கொண்ட மருத்துவர்களுக்கும் செவிலியர்களுக்கும் மனித விடியல் மோகன் அவர்கள் பொன்னாடை அணிவித்து கௌரவித்தார்.
