
இன்று 7.8.2025
தஞ்சாவூர் சாஸ்திரா நிகர் நிலை பல்கலைக்கழகத்தில் ஹர்ஷமித்ரா மருத்துவமனையின் சார்பாக இன்றைய தலைமுறையினருக்கு புற்றுநோய் மற்றும் அதன் பாதிப்புகள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக மருத்துவமனை நிர்வாக இயக்குனர் Dr. G.Govindaraj அவர்கள் பங்கு பெற்று சிறப்புரையாற்றினார் முன்னதாக டாக்டர் விஜய் ஆனந்த் அவர்கள் சிறப்பு விருந்தினர் அவர்களை வரவேற்று கவுரவித்தார். இந்நிகழ்ச்சியில் 180 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் இறுதியில் மாணவ மாணவிகளுடன் கலந்துரையாடலும் கேள்விகளும் கேட்கப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.
