NTT TAMIL

Current Date and Time
Loading...

தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா அவர்களின் 76 வது பிறந்த தினத்தை கொண்டாடும் வகையில் இன்று காலை முதலே திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அஇஅதிமுக சார்பாக பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் அன்னதானம் வழங்கப்பட்டது.

ஸ்ரீரங்கம் சமூக ஊடகப்பிரிவு சார்பில் ஆயில் மில் கோபால் முரளி அகர்வால் ஆகியோரது கூட்டு முயற்சியில் கட்சி உறுப்பினர்களுக்கும் பெண்களுக்கும் நினைவுப்பரிசுகள் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி முன்னாள் அமைச்சர் கழக அமைப்புச்செயலாளர் வளர்மதி, முன்னாள் தமிழ்நாடு அரசு தலைமைக்கொறடா கழக அமைப்புச்செயலாளர் மனோகரன்

ஸ்ரீரங்கம் பகுதி செயலாளர் சுந்தர்ராஜன், திருவானைக்காவல் பகுதிச்செயலாளர் டைமன் திருப்பதி மற்றும் கழக நிர்வாகிகள் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

மேலும் 2000 பேருக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.

Related Posts

POST MY ADD