
திருவானைக்கா அருள்மிகு ஜம்பிகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோயில் இன்று காலை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சாமி தரிசனம் செய்தார் திருவானைக்கா கோயில் வடக்கு வாசல் வழியாக 10:45 மணிக்கு வருகை தந்தார்

அவரை இந்து சமய அறநிலைத்துறை மண்டல இணை ஆணையர் ஞானசேகரன் தலைமையில் வெள்ளி குடத்தில் பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்கப்பட்டது அதனைத் தொடர்ந்து அம்மன் சன்னதியில் உள்ள பிரசன்ன விநாயகரை தரிசித்து விட்டு மூலவர் அகிலாண்டேஸ்வரி தரிசனம் செய்தார்

பின்னர் பேட்டரி கார் மூலம் மூன்றாம் பிரகாரம் வழியாக ஜம்புகேஸ்வரர் வழிபட்டார் அதனைத் தொடர்ந்து உற்சவமூர்த்தி சன்னதியில் கோயில் பரிவட்டங்கள் கட்டப்பட்டு மாலைகள் அணிவிக்கப்பட்டு நினைவு பரிசுகளை கோயில் உதவி ஆணையர் சுரேஷ் கோயில் தலைமை அர்ச்சகர் கார்த்திகேயன் அத்தியாயன பட்டர் வாசுதேவன் ஆகியோர் வழங்கினார்கள்

..

கோயிலின் தல வரலாற்றை கோயில் ஓதுவர் சிவ ஜெகன் எடுத்துரைத்தார் சுமார் ஒரு மணி நேரம் தரிசனம் செய்துவிட்டு 11:35 க்கு ஸ்ரீரங்கம் கோயிலுக்கு சென்றார்

திருவானைக்கா கோயிலுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகை தருவதை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன சுமார் 2 மணி நேரம் பக்தர்கள் கோயிலுக்குள் தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டது

.













சுவாமி தரிசனம் செய்துவிட்டு கோவிலில் இருந்து வெளிவந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை பார்த்ததுடன், அங்கு குழுமியிருந்த பொதுமக்கள் மற்றும் பெண்கள் பாரத் மாதா கி ஜே மற்றும் வந்தே மாதரம் என தொடர்ந்து மகிழ்ச்சியுடன் ஆரவாரமாக முழக்கமிட்டனர்.
அவர்களைப் பார்த்து கையசைத்த உள்துறை அமைச்சர் பாதுகாப்பு வளையத்தை மீறி அவர்கள் இருக்குமிடம் நேரில் சென்று கைகுலுக்கி மகிழ்ந்தார்.
அவருடன் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் ஆகியோரும் உடன் சென்று பொது மக்களுக்கு கைகுலுக்கி வாழ்த்துக்களையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொண்டனர்.


