NTT TAMIL

Current Date and Time
Loading...

05/04/25
திருச்சி

          கழகத் தலைவர் தமிழ்நாடு முதல்வர்

மு க ஸ்டாலின் அவர்களின் 72 ஆவது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் கிழக்கு மாநகர மலைக்கோட்டை பகுதி திமுக சார்பில் மெயின்காட்கேட் ஹோலி கிராஸ்கல்லூரி பழைய குட்செட் ரோட்டில் நடைபெற்றது.

             கூட்டத்திற்கு மலைக்கோட்டை  பகுதி கழகச் செயலாளர்

மோகன் தலைமை தாங்கினார்.

21 வது வட்டக் கழகச் செயலாளர் தர்கா முபாரக் வரவேற்புரை ஆற்றினார்.

கூட்டத்தில் திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.

திராவிட கழக துணைப் பொதுச் செயலாளர் சே.மே.மதிவதனி

மாநகரக் கழகச் செயலாளர் மு மதிவாணன்
ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

21ஆவது வட்ட ஆ கழக செயலாளர் p. ராஜா நன்றியுரையாற்றினார்
இக்கூட்டத்தில் மாவட்டத் துணைச் செயலாளர் மூக்கன், லீலாவேலு, மாநகரக் கழக நிர்வாகிகள் நூற்கான் பொன்செல்லையா சரோஜினி தமிழ்ச்செல்வன் மற்றும் மாவட்ட மாநகர பகுதி கழக நிர்வாகிகள் அணிகளின் அமைப்பாளர்கள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி உரை

ஒன்றிய அரசு தோற்றுப் போன கொள்கையான முன்மொழிக் கொள்கையை நம் மீது திணிக்க பார்க்கிறார்கள். தமிழ்நாடு இந்தி திணிப்பை ஏற்றுக் கொள்ளாததால் தமிழ்நாட்டை நிதிதராமல் ஒன்றிய அரசு வஞ்சிக்கிறார்கள்.

இருந்த பொழுதும் தமிழ்நாட்டை முதலமைச்சர் சிறப்பாக நிர்வகித்து வருகிறார் அதன் காரணமாகத்தான் இந்தியாவிலேயே நம்பர் ஒன் மாநிலமாக தமிழ்நாடு நம்பர் ஒன் முதலமைச்சர் ஆக நம்முடைய முதலமைச்சரும் இருந்து வருகிறார்கள்.

மற்றவர்கள் வீட்டை எட்டிப் பார்ப்பதே ஒன்றிய பாஜக அரசிற்கு வேலையாக போய்விட்டது. முத்தலாக் தடைச் சட்டம் பொது சிவில் சட்டம் குடியுரிமை திருத்த சட்டம்
வக்ஃபு வாரிய திருத்த சட்டம் எனக் கொண்டு வந்து சிறுபான்மை மக்களுக்கு இடையூறு செய்திருக்கிறார்கள் அவர்களுக்கு இடையூறு செய்வது என்றால் இனிப்பு சாப்பிடுவது போல் உள்ளது.
அதை எதிர்த்து ஒரு குரல் ஒலிக்குது ஒலிக்கின்றது என்றால் அது தமிழ்நாடு முதலமைச்சர் குரலாக தான் உள்ளது.

திராவிட மாடல் அரசு சிறுபான்மை மக்களுக்கு அரணாக உள்ளது.

இஸ்லாமிய மக்களுக்கு என்ன தேவை என்பதை அவர்கள் முடிவு செய்து கொள்வார்கள். ஆனால் பக்கத்தை விட்டு எட்டிப் பார்த்து நாங்கள் செய்கிறோம் என கூறி பாஜக முதலை கண்ணீர் வடிக்கிறது.

இஸ்லாமியர்களையும் இஸ்லாமியர் அல்லாதவரையும் பிரித்து ஆளக்கூடிய சூழ்ச்சியை பாஜகவினர் செய்து வருகிறார்கள்.

அனைவரையும் அரவணைக்க கூடிய அரசாக அனைவருக்கும் ஆன அரசாக திராவிட மாடல் அரசு இருந்து வருகிறது.

தமிழ்நாடு பட்ஜெட்டில் அனைவருக்கும் ஆன திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது ஆனால் ஒன்றிய அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில் தமிழ்நாடு என்கிற பெயர் கூட இல்லை.

தமிழக மக்கள் அறிவில் சிறந்த வளர வேண்டும் என்பதற்காக முக்கியமான மாவட்டங்களில் நூலகங்களை முதலமைச்சர் அமைத்து வருகிறார் அந்த வகையில் திருச்சி மாவட்டத்திலும் நூலகம் அமைக்கப்பட உள்ளது அந்த நூலகத்திற்கு காமராஜர் பெயர் வைத்திருப்பதற்கு முதலமைச்சருக்கு கோடான கோடி நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

அறிவு சார்ந்த சமூகத்தை உருவாக்க பல்வேறு முயற்சிகளை முதலமைச்சர் எடுத்து வருகிறார்.

நாட்டில் என்ன நடக்கிறது என்பதை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும் அப்படி அறிந்து கொள்ளும் பொழுது தான் எது உண்மையான முகம் எது போலியான முகம் என்பது தெரிய வரும்.

இந்த ஆட்சி பெண்களுக்கான ஆட்சி பெண்களின் முன்னேற்றத்திற்கான ஆட்சி வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் 200க்கும் அதிகமான தொகுதிகளில் திமுக வெற்றி பெற வேண்டும்

Related Posts

POST MY ADD