
தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் (Secondary Grade Teachers) காலி பணி இடங்களை தகுதி தேர்வு மற்றும் நியமன தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளவர்களுக்கு
நிரந்தர பணி நியமன ஆணை வழங்கிடுக!
தமிழ் நாடு அரசுக்கு துரை வைகோ வேண்டுகோள்!
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையம் அறிவித்த அதிகாரப்பூர்வ SGT – Secondary Grade Teachers (இடைநிலை ஆசிரியர்கள்) ஆசிரியர்கள் காலி பணியிடங்கள் கடந்த 2021 ஆம் ஆண்டு 730 காலியிடங்களும், 2022 ஆம் ஆண்டு 3987 காலியிடங்களும், 2023 ஆம் ஆண்டு 6553 காலியிடங்களும், 2024 ஆம் ஆண்டு 2768 காலியிடங்களும்,
ஆக மொத்தம் 14038 இடைநிலை ஆசிரியர்களுக்கான பணியிடங்கள் காலியாக இருந்து வருகிறது.
மேலும் 2025 இல் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையம் (TRB) தமிழ்நாடு முழுவதும் உள்ள SGT காலிப் பணியிடங்களான 5612 இருந்தது. அதில் 2457 ஆசிரியர்களுக்கு பணி நியமனம் வழங்கி இருக்கிறது.
2013 முதல் 2022 வரை நான்கு முறை நடைபெற்ற தகுதி தேர்வில் 68833
பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் . கடந்த 2024 SGT நியமன தேர்வில் 23972 ஆசிரியர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தமிழ்நாட்டில் நடைபெறும் ஆசிரியர் தேர்வுகளில் SGT (Secondary Grade Teacher) என்ற இடைநிலை ஆசிரியர் தேர்வுகளில் 50 சதவீதம் பெண்களுக்கு இட ஒதுக்கீடு இருக்கும் ஒரே தேர்வு என்பது பெரும் மகிழ்ச்சிக்கும், பெருமைக்கும், பாராட்டுக்கும் உரியதாகும்.
13 ஆண்டுகளாக ஆசிரியராக வேண்டும் என்ற ஒற்றை கனவோடு குடும்ப சூழ்நிலை, உடல்நலம், வயது, சமூக சமநிலை பிறழ்வு, பொருளாதார சிக்கல் என பல்வேறு இன்னல்களை அனுபவிக்கும் SGT ஆசிரியர்களுக்கு மறுதேர்வு ஏதும் இல்லாமல் 22,182 காலி பணியிடங்களுக்கு நிரந்தர பணி நியமன ஆணை வழங்கி அவர்களின் வாழ்வு வளம் பெற வழிவகை செய்யுமாறு தமிழ்நாடு அரசை வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.
அன்புடன்
துரை வைகோ
நாடாளுமன்ற உறுப்பினர் (திருச்சி)
முதன்மைச் செயலாளர்
மறுமலர்ச்சி திமுக
26.08.2025