
இன்று (06.08.2025) காலை மருத்துவக் கல்விக்காக ரஷ்யா சென்று சிக்கிக்கொண்ட இந்திய மாணவர் கிஷோர் சரவணன், தனது பெற்றோரின் அலைபேசியில் அழைத்து, “இன்னும் சிறிது நேரத்தில் என்னை அழைத்துச் செல்ல வாகனம் வரும், அதற்குள் என்னை தயாராக இருக்க சொல்லியுள்ளார்கள்” என்று கூறியதுடன், அது நேராக போர்முனைக்குத்தான் போகும் போல் தெரிகிறது என்று கூறி மனமுடைந்து அழுதுள்ளார்.
இந்தத் தகவலை கேள்விப்பட்டவுடன், அதனை விளக்கமாக விவரித்து எழுதி வெளியுறவுத்துறை அமைச்சர் மாண்புமிகு டாக்டர் எஸ் ஜெயசங்கர் அவர்களுக்கும், வெளியுறவுத்துறை செயலாளர் திரு விக்ரம் மிஸ்ரி அவர்களுக்கும் தனித்தனியாக மின்னஞ்சல் அனுப்பிவிட்டு, அதன் அச்சுப் பிரதியை எடுத்துக்கொண்டு வெளியுறவுத்துறை அமைச்சர் மற்றும் வெளியுறவுத்துறை செயலாளர் அலுவலகத்திற்கு சென்று நேரில் ஒப்படைத்து தனது கோரிக்கையின் அவசரத்தை எடுத்துக் கூறினார் துரை வைகோ mp அவர்கள்.
எப்படியாவது கிஷோர் சரவணன் மற்றும் நூற்றுக்கணக்கான இந்தியர்களை மீட்கும் என்னால் ஆன நடவடிக்கைகளை மேற்கொள்ள புதுடெல்லியிலேயே இருந்துகொண்டு தொடர்ந்து போராடிவருகிறார் துரை வைகோ mp அவர்கள்.