New Trichy Times

Current Date and Time
Loading...

ராம்ஜிநகர்,

மார்ச்,27-

ஸ்ரீரங்கம் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்ற மற்றும் நடைபெற வேண்டிய பணிகள் குறித்து ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பேசிய பழனியாண்டி எம்.எல்.ஏ தற்போது கோடை காலம் என்பதால் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு அதிகளவு மின்சாரம் தேவைப்படும். மேலும் மின்வெட்டுகள் ஏற்பட்டால் தகவல் அறிந்தவுடன் உடனடியாக அதை சரி செய்து தர அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும் மின்வெட்டுக்கு முக்கிய காரணமாக இருக்கும் தெருக்கள் மற்றும் வயல்வெளிகளில் மின்சார உயர்கள் மீது உரசும் மரங்களை உடனடியாக வெட்டி அப்புறப்படுத்துமாறும் கூறினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் கடந்த 2024 .ம் ஆண்டு கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக கொள்ளிடம் ஆற்றில் இருந்த மின் கோபுரம் இடிந்து விழுந்ததால் செயலிழந்த 110 (கி.வே) திருவனை கோவில் துணை மின் நிலையத்தின் மின்பளுவை சமாளிக்கவும் தடையற்ற மின் விநியோகத்தை உறுதிப்படுத்தவும் கொள்ளிடம் வடக்கு கரையில் டோல்கேட் மின் பளுக்களை 110 (கி.வே) சமயபுரம் துணை நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளன. 4 (மெ.வ) கொண்ட மின் பளுவானது 110 (கி.வே) கம்பரசம்பேட்டை துணை மின் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளன. மேற்படி மின் பளுவை சமாளிக்க 110 (கி.வே) தென்னூர் துணைமின் நிலையம் மற்றும் 110 (கி.வ) நீதிமன்ற வளாக துணை மின் நிலையத்திற்கு தலா 1.25 (மெ.வ) மின்பளுக்கள் மாற்றப்பட்டுள்ளன. 4 (மெ.வ) கொண்ட மின் பளுவானது 33 (கி.வே) மெயின் கார்ட் துணை மின் நிலையத்திற்கு இடை இணைப்பின் மூலம் மாற்றப்பட்டுள்ளது. இம்பளுவை சமாளிக்க 1.5 (மெ.வ) கொண்ட மின் பளுவானது கம்பரசம்பேட்டை துணை மின் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. மீதம் உள்ள மின் பளுக்கள் 110 (கி.வே) ஸ்ரீரங்கம் மின் துணை மின் நிலையத்தால் விநியோகிக்கப்பட்டு வருகிறது. மின் கோபுரங்கள் மற்றும் பணிகள் பொது நிர்மாண வட்டத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆகிய மின்பளு மேலாண்மைகள் மேற்கொள்ளப்பட்டதாக எம்.எல்.ஏ விடம் அதிகாரிகள் எடுத்துக் கூறினார்கள். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மின்சாரத்துறை திருச்சி மெட்ரோ மேற்பார்வை பொறியாளர் செல்வி, செயற்பொறியாளர்கள் சண்முகசுந்தரம் (பொது), கணேசன் (திருச்சி கிழக்கு), செல்வம் (ஸ்ரீரங்கம்), குமரேசன் (டி.எல்.சி), உதவி செயற்பொறியாளர்கள் வெங்கடேசன் (ஸ்ரீரங்கம்), கிருபாகரன் (கிராமியம்), பிரபாகரன் (மணப்பாறை), நாராயணன் (தென்னூர்), உதவி மின் பொறியாளர்கள் சிவகாமி (சோமரசம் பேட்டை), தீபா (மணிகண்டம்), அசோக் குமார் (கிராமியம் திருச்சி), ஜெய்கணேஷ் (திருப்பராய்த்துறை) மற்றும் எம்.எல்.ஏ உதவியாளர்கள் சோமரசம்பேட்டை ரவி சந்திரன், திருச்சி லட்சுமணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

POST MY ADD