
20.06.2025 மாலை, திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட புதுக்கோட்டை மாவட்டத்தில் முக்கிய மூன்று கோரிக்கைக்காக அவவிடங்களுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார் துரை வைகோ mp.
முதலாவதாக, கந்தர்வக்கோட்டை முதல் முதுகுளம் வரை உள்ள நெடுஞ்சாலைத்துறையின் 4 கிலோ மீட்டர் சாலையை அகலப்படுத்தக்கோரி வந்த கோரிக்கைக்காக அந்த இடத்தை நேரில் சென்று பார்வையிட்டார்.

அடுத்து, கந்தர்வகோட்டை புதுநகரில் கட்டப்பட்டுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை அவர்களின் அழைப்பின் பேரில் பார்வையிட்டார்.
மருத்துவர்கள் அவரை வாஞ்சையோடு வரவேற்றனர்.
அங்கு, ஆழ்துளை கிணறு அமைத்து 10 ஆயிரம் லிட்டர் குடிநீர்த் தொட்டி வசதி வேண்டி வைக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று உரிய நடவடிக்கையை மேற்கொள்ள உறுதியளித்தார்.

அடுத்து, புதுக்கோட்டை பொன்னான்விடுதிக்கு சென்று, மேல்நிலை குடிநீர்த்தேக்க தொட்டி அமைக்க கலெக்டர் அவர்களிடம் கொடுத்து மனுவை சுட்டிக்காட்டி அப்பகுதி பொதுமக்களிடம் உரையாடினார்.
ஒரு மாத காலத்திற்குள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அப்படி இல்லை என்றால், தனது எம்பி நிதியிலிருந்து தொகை ஒதுக்கி குடிநீர்த்தேக்க தொட்டியை அமைத்துக்கொடுப்பேன் என்று உறுதியளித்தார்.

தொடர்ந்து பொதுமக்களோடு கலந்துரையாடி அவர்களின் கோரிக்கைகளை கணிவோடு விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
துரை வைகோ mp அவர்களின் இந்த குணம் மற்றும் அவரின் மக்கள் பணியை பொதுமக்கள் மனதார வாழ்த்துகின்றனர்.

நாம் பொதுமக்களிடம் பேசியபோது துரை வைகோ mp தங்களுக்கு mp ஆக கிடைத்திருப்பது கடவுளின் கருணை என்றும் தங்களின் கோரிக்கைகளுக்கு உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து தீர்வு தருகிறார் என்றும் வைகோ வைப்போலவே அவரும் செயல் புலியாக செயல் படுவதாகவும் மகிழ்ச்சி யோடு தெரிவித்தனர்.

காலை முதலே நாம் அவரை தொடர்ந்தாம் உண்மையாகவே நம்மால் அவர்கள் அவர்கள் வேகத்திற்கு ஈடு கொடுக்க இயலவில்லை. காலை 9 மணிக்கு தொடங்கி இரவு 10 மணி வரை 12 மணி நேரத்திற்கும் மேலாக ஒரு மனிதர் எந்த வித கலைப்பும் அயற்சியும் இன்றி மக்கள் பணி செய்வதை முதன்முதலில் இப்போதுதான் காண்கிறோம். அவர்கள் செயல் புலி என மக்களால் புகழப்படுவதில் 100 விழுக்காடு உண்மையே உள்ளது.