
அறிவு சூரியனாய் வந்த கருணாநிதி பிறந்தநாள் – ஸ்டாலின் புகழாரம்.
தாழ்ந்து கிடந்த தமிழ்நாட்டை உயர்த்திட, அறிவுச் சூரியனாய் வந்துதித்த தமிழினத் தலைவர் கலைஞரின் பிறந்தநாள் – முதல்வர் மு.க.ஸ்டாலின்
முச்சங்கம் கண்ட முத்தமிழுக்குச் செம்மொழிச் சிறப்பு செய்த முத்தமிழ்க் காவலரைப் போற்றிடும் செம்மொழிநாள்.

ஐந்து முறை முதலமைச்சராகத் தமிழ்நாட்டை ஆட்சி செய்து வரலாறு பல படைத்து – இந்தியாவுக்கே வழிகாட்டும் பேரியக்கமான திமுகவை வழிநடத்தியவர்.
திராவிட முன்னேற்றக் கழகத்தை 50 ஆண்டுகள் வழிநடத்தி, ஒளியும் நிழலும் ஒருசேர வழங்கிய தலைவர் கலைஞரின் உடன்பிறப்புகள் எனப் பெருமை கொள்வோம் – மு.க.ஸ்டாலின்.

தோன்றினும் புகழோடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று
என்ற ஐயனின் வாக்கிற்கு இணங்க

நாகப்பட்டினம் மாவட்டத்தில் `திருக்கோளிலி’ என்று அக்காலத்தில் அழைக்கப்பட்ட திருக்குவளை கிராமத்தில் 1924-ம் ஆண்டு ஜூன் மாதம் 3-ம் தேதி முத்துவேல் மற்றும் அஞ்சுகம் அம்மையாருக்கும் 3-வது மகனாகப் பிறந்தார் கலைஞர் என்று உலகம் போற்றும் கருணாநிதி.

15-வது வயதில் கலைஞர் மு. கருணாநிதி தனது சொந்த பதிப்பகப் பயணத்தை தொடங்கினார், மாணவநேசன் என்ற பத்திரிகையை உருவாக்கினார்.
மு.கருணாநிதி தமிழ் அரசியலில் எழுச்சி பெற உதவிய முக்கிய தருணங்களில் ஒன்று, 1953 -ம் ஆண்டு தனது 29-வது வயதில் கல்லக்குடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது தான்.

தி.மு.க-வின் இந்தி எதிர்ப்பு இயக்கத்தின் முக்கியப் பிரமுகரான மு. கருணாநிதி 1965-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 16-ந்தேதி கைது செய்யப்பட்டு 6 மாத சிறைத் தண்டனை பெற்று பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்தியாவின் 1957-ம் ஆண்டு பொதுத் தேர்தல் நடைப்பெற்றது. தி.மு.க.வின் சார்பில் கலைஞர் திருச்சி மாவட்டம் குளித்தலை தொகுதியில் நின்றார். வென்றார். தனது 33-ம் வயதில் சட்டசபைக்குள் நுழைந்தார்.

இதற்குப் பின் 2016 ஆண்டு வரை 13 முறை நடந்த சட்டசபை தேர்தலில் ஒன்றில் கூட தோற்காமல் வெற்றி வாகை சூடினார். 1984-ல் மட்டும் அவர் தேர்தலில் நிற்கவில்லை. தொடர்ந்து 13 முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட மாபெரும் சாதனையாளர் கலைஞர்.

கலைஞர் என்று அன்புடன் நினைவு கூறப்படும் முத்துவேல் கருணாநிதி தமிழ்நாட்டில் 5 முறை முதலமைச்சராக பதவி வகித்தார். அவர் சமூகத்தின் விளிம்புநிலை பிரிவினரை மேம்படுத்துவதற்கும், பாலின சமத்துவத்தை மேம்படுத்துவதற்கும் அரும்பாடுபட்டார்.

சிறந்த எழுத்தாளர், கவிஞர் மற்றும் நாடக ஆசிரியராகவும் இருந்தார். தமிழில் பல இலக்கியப் படைப்புகளை எழுதினார். கலைஞர் கருணாநிதி ஆட்சி காலத்தில் ஏராளமான மக்கள் நலத்திட்டங்களை கொண்டுவந்தார்.

இந்த பிரபஞ்சம் உள்ளவரை கலைஞர் அவர்களின் பெயர் தகதாய சூரியனாக ஒளி வீசி பிரகாசிக்கும்.