
சென்னை மயிலாப்பூரில் அமைந்துள்ள சாவித்ரி அம்மாள் ஓரியண்டல் மேல்நிலைப்பள்ளியின் சார்பாக நாட்டு நல பணித்திட்ட சிறப்பு முகாம் சமஸ்கிருத கல்லூரி வளாகத்தில் உள்ள டேக் சூடாமணி அரங்கத்தில் 26-09-2025 ஆம் தேதி முதல் 02-10-2025 வரை நடைபெறுகிறது.

அதில் ஒரு அங்கமாக அனைத்து மாணவர்களுக்கும் தமிழி (தமிழ் – பிராமி) எழுத்துக்கள் பயிற்சி வகுப்புகள் நடைபெற்றன.
தமிழ்நாடு தொல்லியல் துறை ஆணையர் அவர்களின் வழிகாட்டுதல் படி கல்வெட்டுகளில் இருக்கக்கூடிய எழுத்துக்களை படிப்பதற்கு பயிற்சிகள் வழங்கப்பட்டன.

அனைத்து மாணவர்களும் மிகுந்த உற்சாகத்துடன் கலந்து கொண்டு பிராமி எழுத்துக்களை படித்து கல்வெட்டுகளை படித்து காண்பித்தனர்.
மேலும் நாட்டு நல பணித்திட்டத்தின் மாவட்ட தொடர்பு அதிகாரி அவர்கள் பள்ளிக்கு வருகை புரிந்து அனைத்து மாணவர்களுக்கும் தன் ஆளுமை பேச்சு மூலமாக அறிவுரை வழங்கி மாணவர்களை உற்சாகப்படுத்தினார்.
உடன் பள்ளி தலைமை ஆசிரியை (பொறுப்பு) திருமதி வித்யா, திரு கி. ஹரிஹரன் திட்ட அலுவலர், திரு. P.M.S சரவணன் உதவி திட்ட அலுவலர் மற்றும் மாணவர்கள் உடன் இருந்தனர்.



