
மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளிடம் விவசாயத்திற்கு தண்ணீர் கேட்டு கோரிக்கை
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம் திருப்பராய்த்துறை வருவாய் கிராமத்தில் உள்ள அணலையில் பல வருடமாக பயன்பாட்டில் இருந்த பாசன வாய்க்காலை தனிநபர் ஒருவர் தனது பட்டா நிலத்தில் செல்வதாக கூறி மூடிவிட்டார்.
இதனால் அந்த வாய்க்கால் வழியாக பாசனம் பெற்று வந்த விவசாயிகள் தங்கள் நிலங்களுக்கு ஃபீல்டு போத்தீஸ் – 25/1959 சட்டத்தை அமல்படுத்தி,பட்டா நிலத்தில் காலம் காலமாக ஓடி வந்த வாய்க்காலில் மீட்டு, விவசாயத்துக்கு நீர் கிடைக்க வழிவகை செய்யுமாறு திருச்சி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளரிடம் முதல்வரின் முகவரி மூலம் விவசாயிகள் மனு அளித்துள்ளனர்.
இந்த சட்டத்தின் படி, “வயல்வெளியில் தண்ணீர் பாயும் போது தடை அல்லது குறுக்கீடு செய்வது தடைசெய்யப்பட்டுள்ளது. எந்தவொரு நபரும், எந்தவொரு வயலிலும் நீர் ஓட்டத்தைத் தடுக்கும் அல்லது குறுக்கிடும் அல்லது தடுக்க அல்லது குறுக்கிடக்கூடிய எதையும் செய்யக்கூடாது.எந்தவொரு நபரும் விதிகளை மீறினால், அவருக்கு ஆறு மாதங்கள் வரை சிறைத்தண்டனை அல்லது ஆயிரம் ரூபாய் வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.”
விவசாயிகளின் தாழ்மையான கோரிக்கை என்னவென்றால்,
” இந்த வாய்க்காலை விட்டால் வேற வாய்க்கால் மூலம் எனது வயலுக்கு தண்ணி வருவதற்கு வழியில்லை. பத்தடி தூரத்தில் உய்யக்கொண்டான் வாய்க்காலில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது ஆனால் எனது வயல் போல் 10-20 ஏக்கர் நிலங்கள்தண்ணீர் இல்லாமல், விவசாயம் செய்ய முடியாமல் தரிசாகும் ஆவல நிலையில் உள்ளது.
தயவுசெய்து , இந்த வருடம் விவசாயம் செய்வதற்கு தண்ணீர் தாருங்கள், இல்லை என்றால் அனைத்து நிலங்களும் விவசாயம் செய்யப்படாமல் தரிசாக போய்விடும். தயவுசெய்துவிவசாயத்தையும் விவசாயிகளையும் நஷ்டத்தில் இருந்தும், அழிவிலிருந்து காப்பாற்றுங்கள்.
தயவுசெய்து , தமிழ்நாடு சட்டம் 25/1959 படி தங்களுக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தி விவசாயத்திற்கு தண்ணீர் தாருங்கள்
சட்டப்படி நடவடிக்கை எடுத்து இதுபோன்ற நிகழ்வுகள் இனிமேல் நடக்காமல் இருப்பதற்கும்வழி வகைகள் செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். ” என்கிறார்கள்


