திருச்சி நவ 05
நெட்வொர்க் வெல்பர் அசோசியேசன் மாநில மாநாடு திருச்சியில் வருகிற 8ம் தேதி நிறுவன தலைவர் மனோகரன் தலைமையில் நடைபெற உள்ளது.
இது குறித்து பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் ஹோட்டலில் துணைத் தலைவர் துணைத் தலைவர் தமிழ்ச்செல்வன்
செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்.
வருகிற சட்டமன்ற தேர்தலில் முன்னெறித்தி மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளோம் நேரடி வர்த்தகத்தை வரைமுறைப்படுத்தும் வகையில் கேரளவை போல் சட்டம் இயற்றி தனி வாரியம் அமைக்கப்பட வேண்டும்,
அதன் மூலம் மக்களை ஏமாற்றும் போலி நிதி நிறுவனங்களை தடை செய்ய வேண்டும். மேலும், நிறுவனங்களிடமிருந்து மக்களை காக்க வேண்டும்.
நிதி நிறுவனங்களிடம் ஏமாற்றப்பட்ட மக்களுக்கு நியாயம் கிடைக்க ஒரு நபர் கமிஷன் அமைக்க வேண்டும். நெட்வொர்க் துறையில் ஈடுபட்டுள்ள லட்சக்கணக்கானோர் பயன்பெறும் வகையில் நல வாரியம் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 3அம்ச கோரிக்கைகளை அரசுக்கு முன் வைக்கிறோம். எங்கள் கோரிக்கைகளை ஏற்றுக் கொள்ளும் கட்சிகளுக்கு எங்களுக்கு வாக்கை செலுத்தி பிரச்சாரத்தை மேற்கொள்வோம். மேலும், இக்கோரிக்கைகளை வலியுறுத்தி
திருச்சியில் வருகிற 8ந் தேதி பொதுக்கூட்டம் எல் கே எஸ் மஹாலில் மாநிலத் தலைவர் தலைமையில் நடைபெற உள்ளது என தெரிவித்தார்.
பேட்டின் போது நிர்வாகிகள் ராஜசேகர், ரூபன், ராமச்சந்திரன், பாலமுருகன், கோவை பிரபாகரன், விக்டோரியா, வாசுதேவன் பிரபாகரன் மற்றும் உயர்மட்ட குழு உறுப்பினர்கள் உடனிருந்தனர்.


