
திருச்சிராப்பள்ளி மாவட்டம் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அல்லித்துறை பஞ்சாயத்தில் உள்ள சுபதம் அவென்யூவில் சாக்கடை கழிவு நீர் வீடுகளை சூழ்ந்து இருக்கும் காரணத்தினால் அங்கு குடியிருக்கும் மக்கள் இயல்பு வாழ்க்கை வாழ முடியாமலும் நோய் தொற்றுக்கு ஆளாகி வருவதாகவும் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ பழனியாண்டி விரைந்து நடவடிக்கை எடுத்து அவர்களின் பிரச்சனையை சரி செய்ய வேண்டும் என்றும் கோரிக்கையை வைத்து செய்தி வெளியிட்டிருந்தோம்

அதனை ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதியின் எம்எல்ஏ திரு பழனியாண்டி அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றதன் விளைவாக இன்று காலை மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக அந்த இடத்திற்கு சென்று அந்த குடியிருப்பு பகுதியை பார்வையிட்டதோடு விரைவில் நடவடிக்கை எடுத்து சரி செய்வதாக உறுதியளித்துள்ளனர்.

நம்முடைய செய்தியை கண்ட சில மணி நேரங்களிலேயே துரித நடவடிக்கை எடுத்த ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ திரு பழனியான்டி அவர்களுக்கும் அரசு அதிகாரிகளுக்கும் சுபதம் அவென்யூ மக்கள் சார்பாகவும் நியூ திருச்சி டைம்ஸ் சார்பாகவும் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.

கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வந்து மக்கள் பணியாற்றுவதில் எந்த விதத்திலும் தான் சளைத்தவர் அல்ல என்று மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறார் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ திரு பழனியாண்டி அவர்கள்.
